ஐபிஎல் 2023 க்கான 26லீக் போட்டிகளில் அட்டவணையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள அணிகளான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஜெய்பூரில் உள்ள சாவை மான்சிங் மைதானத்தில் எதிர்கொண்டன. அதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். அதுவே அவருக்கு பாதகமாக அமைந்தது,ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இருப்பினும் அஷ்வின் எடுத்த விக்கெட் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுலும் மேயர்ஸும் பேட்டிங்கில் களமிறங்கினர். லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு ஆரம்பம் முதலே ரன்களை அடிக்க கஷ்டப்பட்டு வந்தனர். அதற்க்கு ஏற்றார் போல் ராஜஸ்தான் அணியும் கைக்கு வரும் கேட்ச்களை விட்டு வண்ணமே இருந்தன. அதன் பிறகு ரன்களை அடிக்க வேகம் எடுத்தனர், வேகம் எடுத்த நிலையிலே கே.எல்.ராகுல் 39 ரன்களிலே விக்கெட்டை இழந்து வெளியேறினார். . சஞ்சு சாம்சன் அடித்த ரன் அவுட்டால் பூரான் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 154 மட்டுமே அடித்தனர்.

155 ரன்களை எடுத்தல் வெற்றி என்று களமேரங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆரம்பம் முதலே அதிரடியை காட்டினர்கள். லக்னோ அணியின் பௌலர்களல் தொடக்க ஆட்டகரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். அதன் பிறகு தான் ராஜஸ்தான் அணிக்கு சோதனை ஆரம்பித்து. இறுதியில் ராஜஸ்தான் அணி இறுதியில் 144 ரன்களை மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது. அப்போட்டியில் அஷ்வின் எடுத்த விக்கெட்டனாது இணையத்தில் பரவி வருகிறது.

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் லக்னோ பேட்ஸ்மேன் கைல் மேயர்ஸ் மிக சிறப்பாக பேட்டிங் செய்து விளையாடி வந்தார். மேயர்ஸ் 42 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார்.இருப்பினும், ராஜஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆர்.அஷ்வின் தனது அற்புதமான பந்துவீச்சால் மேயர்ஸின் ஸ்டம்பைப் பிடுங்கி எறிந்தார். கைல் மேயர்ஸை அஷ்வின் வெளியேற்றும் வீடியோ சமூகவலை தளங்களில் பரவி வருகிறது
வீடியோ
— Nitish Kushwaha (@official_nitis) April 20, 2023
ஐபிஎல் 2023ல் அஷ்வினின் ஆட்டம்
இந்த ஆண்டு, அஷ்வின் ஐபிஎல்லில் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் 6.75 சராசரியில் 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு, அஷ்வின் ராஜஸ்தான் அணிக்காக மொத்தம் 17 போட்டிகளில் விளையாடி 7.51 எக்னாமியுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.





