உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போதுவரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதற்க்கு முன்னதாக லக்னோ அணியை வெற்றி பெற்றும் டெல்லி அணி இதற்கு முன்பு பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியும் இன்றைய போட்டியில் விளையாடியது.இதில் டெல்லி அணி வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்வோமா என்ற கேள்வி டெல்லி அணியின் ரசிகர்களிடையே பெரும்பான்மையாக இருந்தது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பணத்திற்கு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெரிய கார் விபத்து ஓன்று நடந்தது. அவர் விளையாடாமல் இருந்தார் அவர் இந்த வருடம் தான் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்விற்கு மீண்டு வந்துள்ளார். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் வீரர்கள் தொடக்கத்தில் சற்று நின்று நிதானமாக விளையாடி பவர்ப்ளே ஓவரில் ரன்களை குவிக்க தவறிவிட்டனர்.

ஆனால் அதன் பின்பு வந்த ரியான் பராக் மற்றும் ஜூரேல் இணைந்து ராஜஸ்தான் அணிக்கு பெரிய இலக்கு எட்ட உதவி செய்தனர். அதில் அதிகபட்சமாக ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் அடித்திருந்தார் அதில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் அடங்கும். அதற்கு அடுத்த இடத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். அதில் அவர் மூன்று சிக்சர்களை அவர் அடித்திருந்தார். அதன் பின்பு தனது அதிரடியாக ஆட்டத்தால் ஜூரேல் 12 பந்துகளில் 20 ரன்களை அடித்து இருந்தார். அதில் அவர் மூன்று பவுண்டரிகளை அடித்திருந்தார்.
எனவே ராஜஸ்தான் ராயல் அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறி வந்தாலும் அதன் பின் பராக் மற்றும் ஜூரேல் சிறப்பாக செயல்பட்டதால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்கள் குவித்து இருந்தது. அதன் பின் பேட்டிங் செய்த டெல்லி அணியும் மிடில் ஆர்டரில் சற்று சொதப்பி இருந்தாலும் அதன் பின் வந்த வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். இருப்பினும் ராஜஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இருந்தது.
In the next two years Riyan Parag is playing for India…
— Irfan Pathan (@IrfanPathan) March 28, 2024
இந்நிலையில் ராஜஸ்தான் அணி வெற்றியடைய முக்கிய காரணமாக இருந்த ரியான் பராக் குறித்து முன்னாள் இந்திய அணியின் வீரர் இர்பான் பதான் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது ரியான் பராக் இன்னும் இரண்டு வருடங்களில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று பதிவிட்டுள்ளார்.
Don’t ever take Indian domestic cricket lightly, it’s for your own good. Look at Riyan Parag. He is performing well in the IPL straightaway cos he made tons of runs there.
— Irfan Pathan (@IrfanPathan) March 28, 2024
மேலும் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒரு பதிவை இட்டிருந்தார். அந்த பதிவில் : இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட்டை சாதாரணமானதாக எண்ணி விடாதீர்கள். இது உங்களுடைய நலத்திற்காக சொல்கிறேன். ரியான் பாரக்கை பாருங்கள்.அவர் ஐபிஎல் போட்டியில் வந்தவுடனே அற்புதமாக விளையாடுகிறார். அதற்கு காரணம் அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அற்புதமாக விளையாடி ரன்களை குவித்தது தான் என்று பதிவிட்டுள்ளார் இர்பான் பதான்.





