
சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பி வந்தனர். சென்னை அணி கடைசிவரை போராடி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டும் தான் அடித்து இருந்தது. இருந்த போதிலும் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டியில் தோனி 18 ஓவர்களில் வருவார். அதன் போது சில சிங்கிள் எடுப்பதிலும், மிட்சலுக்கு ஸ்ட்ரைக் கொடுப்பதிலும் தோனிக்கும் விருப்பம் இல்லாதது போல தெரிந்தது.
மேலும் வழக்கமான அதிரடியான தோனியை காட்டிலும் நேற்றும் கொஞ்சம் பொறுமையாக விளையாடினார். இந்நிலையில் இது குறித்து இர்பான் பதான் கூறுகையில் :எம்.எஸ். தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், நீங்கள் நிச்சயமாக அவர் அடித்த சிக்ஸரைப் பற்றி பேசுவீர்கள். மக்கள் அவரை மிகவும் விரும்புகிறார்கள். இருப்பினும் அவர் கடந்த போட்டியில் விளையாடிய விதம் அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

தோனி சிங்கிள் எடுக்க மறுத்திருக்க கூடாது. இது ஒரு டீம் கேம். டீம் கேமில் அப்படிச் செய்யாதீர்கள். மற்ற வீரரும் ஒரு சர்வதேச வீரர். அவர் பந்து வீச்சாளராக இருந்திருந்தால் எனக்குப் புரிந்திருக்கும். இதே போன்று ரவீந்திரன் ஜடேஜாவுடனும் மிச்சேல் உடனும் சிங்கிள் எடுக்க மறுத்தீர்கள். ஆனால் தோனி அப்படி செய்வதை தவிர்த்திருக்க முடியாது என்றார் இர்பான் பதான்.

பஞ்சாப் அணி தோனிக்கு சிறப்பான திட்டமிடலுடன் பந்து வீசினார்கள். அர்ஷ்தீப் ஓவரில் நிச்சயம் ஒரு சிக்சர் அடித்திருந்தாலும், அவரும் நன்றாகப் பந்துவீசினார். கடந்த சில ஆண்டுகளாக தோனி ஸ்பின்னர்களுக்கு எதிராக ரன்களை எடுக்க முடியவில்லை, அதனால்தான் அவர் கடைசி ஓவர்களில் விளையாடுகிறார். வேகப்பந்து வீச்சாளர்கள் யார்க்கர்களை வீச நினைக்கும் போது அவர் கடைசி ஓவரில் ரன்களை அடிக்கிறார் என்றார் பதான் குறிப்பிட்டார்.





