
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 53 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் தரம்சாலாவில் உள்ள மைதானத்தில் மோதியது. சென்னை அணி இதற்க்கு முன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியை தழுவி இருந்தது. அதற்க்கு ஈடுகட்டும் வகையில் தான் இன்றைய போட்டி அமைத்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு இறுதி வரை கை கொடுத்தது என்று சொல்லலாம். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. சென்னை அணியின் வீரர்கள் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் ஜடேஜா சிறப்பாக பேட்டிங் மற்றும் பௌலிங் செய்து இருந்தார். சென்னை அணி சார்பில் அதிக பட்சமாக சென்னை அணி ஜடேஜா 43 ரன்களும் ருதுராஜ் 32 ரன்களும் மிட்சல் 30 ரன்களையும் அடித்து இருந்தார்கள்

168 என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பம் முதலே சொதப்பலாக அமைய 20 ஓவர்கள் முடிவில் அவர்களால் 139 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் 30 ரன்களும் ஷஷாங்க் சிங் 27 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. சென்னை அணியின் பந்து வீச்சை பஞ்சாப் அணியால் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபக இருந்தது.
சென்னை அணி சார்பில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் சிமர்ஜித் மற்றும் தேஷ்பாண்டே தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஷர்துல் தாக்கூர் மற்றும் சான்ட்னர் தலா ஒரு விக்கேட்டுகையும் வீழ்த்தி இருந்தார்கள் இதன் மூலம் பஞ்சாப் அணியை 1115 நாட்களுக்கு பிறகு நேற்று வெற்றியை பதிவு செய்து இருந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல தோனி 9வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து இருந்தார்.இருப்பினும் அவர் ரன் எடுக்காமல் ஹர்ஷல் பட்டேலிடம் டக் அவுட்டாகி வெளியேறி இருந்தார்.

இது குறித்து முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறுகையில்,அவருக்கு 42 வயது என்று எனக்குத் தெரியும், ஆனால் அவர் பிட்டான நிலையில் இருக்கிறார். வரிசையை உயர்த்தும் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும். அவர் குறைந்தது நான்கு முதல் ஐந்து ஓவர்கள் வரை பேட் செய்ய வேண்டும். அவர் கடைசி ஓவர் அல்லது கடைசி 2 ஓவர்களுக்கு பேட்டிங் செய்கிறார். அது நீண்ட காலத்திற்கு CSK க்கு உதவாது. என்றும் தோனி ஷர்துல் தக்கூர்க்கு முன் வந்து விளையாட வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.





