உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல தடுமாறி வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இதில் என்றும் இல்லாமல் டாஸை வென்ற ருதுராஜ் கெய்க்குவாட் பந்துவீச்சை முடிவு செய்தார். இந்நிலையில் இது அவர்களுக்கு பாதகாமாக சென்றது. முதலில் பந்துவீசிய சென்னை அணி மோசமாக பந்துவீசி 231 ரன்களை விட்டுக்கொடுத்தது. மேலும் குஜராத்தை அணியில் சாய் சுதர்ஷன் மற்றும் சுப்மன் கில் இருவரும் சதம் அடித்தனர்.

இதனை தொடந்து இந்த பெரிய இலக்கை துரத்த வந்த சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திர மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்குவாட் என தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில் டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி பொறுமையாக ஆடினாலும், அவர்களும் ஆட்டமிழந்தனர். இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கியமான ஒரு காரணமாக இருந்தவர் குஜராத் அணியின் பந்துவீச்சாளர் மோஹித் சர்மா.
இந்நிலையில் அவர் குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறியதாவது : என்னைப் பொருத்தவரை மோஹித் சர்மா தான் ஆட்ட நாயகன். ஏனெனில் அது ஒரு தட்டையான பிட்ச் மற்றும் அதிக ஸ்கோரிங் ஆட்டமாக இருந்தது. தோல்வியடைந்த அணியும் 200 ரன்களை நெருங்கியது. அங்கு மோஹித் ஷர்மா தனது மாறுபாடுகளை கட்டுப்பாட்டுடன் வீசினார். மேலும் மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி ஆகியோர் சரியாக செட்டில் ஆகி இருந்தனர். இந்த இரண்டு பேட்டர்களில் யாரேனும் அப்படியே இருந்திருந்தால் கண்டிப்பாக போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும் அல்லது போட்டி நெருங்கி வந்திருக்கும். அதைக் கருத்தில் கொண்டு மோஹித் சர்மாவின் பந்துவீச்சு பாராட்டத்தக்கது. மோகித் ஷர்மா தனது பழைய அணியைப் பார்த்த பிறகு வித்தியாசமான தாளத்தில் வருகிறார் என்றார் இர்பான் பதான்.

மேலும் மோஹித் சர்மா குறித்து பேசிய ஹர்பஜன் சிங் கூறுகையில் : இந்தப் தொடரை பொறுத்தவரியில் அணிகள் நிறைய ரன்களை அடிப்பதைப் பார்த்திருக்கிறோம், இன்றைய போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் ரன்களையே கொடுக்காத இடத்தில் குறைந்த ஸ்கோராக இல்லை. இவ்வளவு ரன்கள் எடுக்கும்போது, பந்துவீச்சு பங்களிப்பு அணிக்கு மிகப்பெரியதாகிறது.

டேரில் மிட்செல் மிகவும் நன்றாக விளையாடினார் மற்றும் சிவம் துபே ஒரு அற்புதமான வீரர். ஆனால் மோஷித் சர்மாவின் பந்துவீச்சு வித்தியாசத்தை ஏற்படுத்தியது. மோஹித் அளவுக்கு அனுபவம் இல்லாத வேறு யாராவது இருந்திருந்தால் இந்த ஆட்டம் சென்னைக்கு சாதகமாக சென்றிருக்கலாம் என்றார் ஹர்பஜன் சிங்.





