உலக புகழ்பெற ஐபிஎல் 2024 தொடர்ந்து தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஞாயற்று கிழமை என்பதினால் இரண்டு போட்டிகள் நடந்தது. இதில் நேற்று முதல் போட்டியாக பெங்களூரு அணியும், கொல்கத்தா அணியும் மோதி கொண்டது. இதில் முதலில் டாஸை வென்ற பெண்களுக்கு அணி பந்துவீச முடிவு செய்தது. இந்த இரண்டு அணிகளுமே வெற்றி என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும் நிலையில் இரண்டு அணிகளுமே போராடியது.
குறிப்பாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து இந்த ஐபிஎல் தொடரில் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட பெங்களூரு அணி இழந்துள்ள நிலையில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் சரியாக விளையாடினாலும் ஐந்து மற்றும் ஆறாவது ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருந்த போதியிலும் கொல்கத்தா அணிக்கு ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் ரன்களும் மளமளவென ஏறியது. இறுதியில் கொல்கத்தா 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை அடித்தது. இடஙக இமாலய இலக்கை எதிர்த்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது விராட் கோலி ஆறு பந்துகளில் 18 ரன்களை எடுத்து நல்ல நிலையில் இருக்கும் போது அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து கேப்டன் ஆட்டமிழக்க 11 ஓவர் வரையில் போட்டியானது சரியாகத்தான் சென்றது. ஆனால் 11ஓவருக்கு பிறகு விக்கெட்டுகள் விழுக கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் முதல் இரண்டு பந்துகளில் ரன் ஓட வாய்ப்பு இருந்தும் தினேஷ் கார்த்திக் மறுத்துவிட்டார். அதனை தொடர்ந்து 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் தினேஷ் கார்த்திக். பின்னர் கரண் சர்மா கடைசி ஓவரில் 3 சீஷர்களை விளாசினார்.

இந்நிலையில் நிலையில் தான் போட்டிக்கு பிறகு பேசிய முன்னல் இந்திய வீரர் இர்பான் பதான் கூறியதாவது : நாங்கள் அனைவரும் விராட் கோலி ஆட்டமிழந்தது எவ்வாறு தோல்விக்கு பங்கு வகித்தது என்பதில் கவனம் செலுத்தினோம். இருப்பினும் கூர்ந்து கவனித்தால் தோல்விக்கு தினேஷ் கார்த்திக் தான் காரணம். அவர் இரண்டு முறை ஒரு சிங்கிள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் ரஸ்ஸளிடம் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பிறகு பிறகு மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் மூன்று சிக்ஸர்களை அடித்த கர்ன் ஷர்மாவை அந்த மூத்த வீரர் நம்பவில்லை.

அவரது தவறினால் ஆர்சிபி தோல்வியடைந்து மேலும் அணியை பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேற்றியது. ஒரு பேட்டராக, நீங்கள் உங்கள் பேட்டிங் பார்ட்னரை நம்ப வேண்டும். கர்ணுக்கு எப்படி பேட்டிங் செய்வது என்று தெரியும், அவர் ரன்களை அடிக்க முடியும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக DK நிலைமையை புரிந்து கொள்ளத் தவறி பெரும் விலை கொடுத்தார். அதுவே ஆர்சிபி தோல்வியடைய காரணம் என்றார் இர்பான் பதான்.




