
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் பஞ்சாப் அணியும் குஜராத் அணியும் முல்லான்பூரில் உள்ள மைதானத்தில் நேற்று மோதியது. இந்த இரு அணிகளும் அவர்கள் விளையடிய கடைசி போட்டியில் தோல்வியை தழுவி இருந்தனர். நேற்று போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். வழக்கம் போல் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பி விட்டனர்.

அது மட்டும் இல்ல்லாமல் மிடில் ஆர்டரில் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வந்த ஷஷாங் சிங் மற்றும் அர்ஷ்தோஷ் ஷர்மா இவர்களாலும் ரன்களை குவிக்க முடியவில்லை. எனவே பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. அதன் பின் பேட்டிங் செய்த குஜரத் அணியும் சற்று தடுமாறி தான் விளையாடி வந்தனர். இருப்பினும் பினிஷராக வந்த திவாட்டியவின் சிறப்பான ஆட்டத்தால் குஜராஜ் அணி நேற்றைய போட்டியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் பஞ்சாப் அணியின் மோசமான பேட்டிங்கிற்கு காரணம் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் என்றும் சொல்லலாம். ஏனென்றால் அவர் தான் குஜராத் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசி இருந்தார். அவர் வீசிய நான்கு ஓவர்களில் 33 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து நான்கு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். பஞ்சாப் அணியின் அதிரடி வீரர்களான ஜிதேஷ் ஷர்மா ஷஷாங்க் சிங் அஷுதோஷ் ஷர்மா மற்றும் ஹர்ப்ரீத் பிரார் விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியை சுருட்டி இருந்தார். இதற்காக நேற்று அவர் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்று இருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், அணிக்காக எனது 120% கொடுக்க முயற்சிக்கிறேன், 20-25 நாட்களுக்குப் பிறகு விளையாடுகிறேன், அதனால் அங்கு சென்று, என்னை ரசித்து, என்னுடைய அனைத்தையும் கொடுக்க விரும்பினேன். எந்த முடிவு வந்தாலும் அச்சமின்றி அணிக்காக விளையாடலாம் என்ற அழகிய சூழலை ஆஷிஷ் நெஹ்ரா உருவாக்கியுள்ளார். என்னை ரசிக்கச் சொல்லி, என்னை வெளிப்படுத்த நிறைய சுதந்திரம் கொடுத்தார்.

உள்ளுணர்வாக நான் விக்கெட்டை உணர்ந்தேன், வேகத்தை மாற்றுவதுதான் இங்கு செல்ல வழி, அது அழகாக வேலை செய்தது. இன்று வந்த அனைவருக்கும் நன்றி. ராகுல் திவாட்டியா மீண்டும் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரஷித் மற்றும் நூர் அழகாக பந்து வீசினர், ஒட்டுமொத்த குழு முயற்சி என்றும் அவர் கூறினார்





