
மும்பை அணி ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து விலக்கியது சரிதான் என்றும் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள்.
)
இது வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விளையாடும் விளையாட்டு ஆகும். இந்த லீக் தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது.

இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர். ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷரம்வை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது.
அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் 2024 மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மன்சுறேக்கர் கூறுகையில், “ரோஹித் ஷர்மாவைப் பற்றி நாம் உணர்ச்சிப்பூர்வமாகவோ உணர்ச்சிவசப்பட்டோ நினைக்கக் கூடாது. கேப்டன் பதவியை மாற்றியாது ஒரு நல்ல நடவடிக்கை என்று நான் நினைக்கிறேன், ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த ரன் எடுக்க கூடிய கேப்டன் என்று அவர் நிருபித்து விட்டார்.

ரோஹித் ஷர்மா நீண்ட காலமாக ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையடாமல் இருந்து வருகிறார். எனவே, ஹர்திக் பாண்டியா போன்ற ஒருவரைக் கொண்டிருப்பது நிறைய கிரிக்கெட் அர்த்தத்தை அளிக்கிறது. இது எப்படி நடந்தது, இடமாற்றம் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரோஹித் ஷர்மாவை மிகவும் ஆதரிக்கும் எனவே அவர் அழுத்தம் இல்லாமல் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன். ரோஹித் ஷர்மா, கேப்டனாக இருந்தபோதும் அதே பேட்டராக இருப்பார். அதனால் நான் தலைமை மாறவே இல்லை” என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கூறினார்.





