ஐபிஎல் தொடரின் 26வது போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் ஸ்டேடியத்தில் புள்ளிகள் பட்டியலில் சிறந்து விளங்கும் இரண்டு அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிகளுக்கு இடையே மோதல் நடைபெற்றது. இந்த போட்டி இரு அணிகளுக்குமான புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கான போட்டியாக இருப்பதினால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னிலை இருக்கிறது. மறுபுறம், காயங்களால் சிரமப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி போட்டியில் போராடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அது சரியான முடிவு என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிரூபித்தது. முதல் பாதியில் விக்கெட்டுகளை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்கள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பெரிய ஸ்கோரை கொடுக்க விடாமல் தடுத்தனர்.
இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு லக்னோ அணியால் முதல் இன்னிங்சில் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் போது லக்னோ அணி சார்பாக மியர்ஸ் 51 ரன்களும். கேப்டன் கே.எல்.ராகுல் 39 ரன்களையும் எடுத்தனர். இரண்டு பேட்ஸ்மேன்களுக்கிடையில் 82 ரன்களின் தொடக்க பார்ட்னர்ஷிப்பும் இருந்தது, ஆனால் அதன் பிறகு எந்த பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாட முடியவில்லை.

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இந்நிலையில் எளிதான இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ஆனால் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததற்கு பிறகு எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஆடவில்லை. எனவே ராஜஸ்தான் அணி இறுதியில் 144 ரன்களை மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது.
— INDIAN CRICKET (@FanOfIndianCric) April 19, 2023
Gautam Gambhir shocking reaction on Jos Buttler 112 mtr six off Yudhvir Singh. #RRvLSG pic.twitter.com/5NTUxDwp3u
— Vikram Rajput (@iVikramRajput) April 19, 2023
இந்த தோல்விக்கு காரணமா மிடில் அடர் பேட்ஸ்மேன்கள் மெதுவான ஆட்டம் தான் என்று கூறப்படுகிறது. ஏனெற்றால் தொடக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்கள். தொடக்க பேட்ஸ்மேன்களுக்கும் 11 ஓவர்களில் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது. இதில் ஜெய்ஸ்வால் 38 ரன்களும், பட்லர் 35 ரன்களும் எடுத்துள்ளனர். இந்த இன்னிங்ஸின் போது, பட்லர் ஐந்தாவது ஓவரில் 112 மீட்டர் பெரிய சிக்ஸரை அடித்தார், பந்து நேராக மைதானத்திற்கு வெளியே விழுந்தது. இது இந்த ஐபிஎல் சீசனில் 2 வது பெரிய சிக்ஸர் ஆகும். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





