உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 18வது போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூரில் உள்ள மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது ராஜஸ்தான் ராயல் அணி இதற்க்கு முன்பு நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றியைக் கண்டும் பெங்களூர் அணி இதற்கு முன்பு நடந்த நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று மீதி மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் அணியின் கேப்டன் சஞ்சு சம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இருந்தார். அது ஆரம்பத்தில் பெங்களூரு அணிக்கு சிறப்பான முடிவாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே பெங்களூரு அணியின் வீர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். பெங்களூரு அணியின் தொடக்கக்காரர்களாக டு பிளசிசிஸ் மற்றும் விராட் கோலி இணைந்து அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்து வந்தது.
பெங்களூரு அணிக்கு ஆரம்பம் சிறப்பாக இருந்தாலும் அதன் பின் வந்த வீரர்களால் அந்த வேகத்தை தக்க வைத்து கொள்ள முடியவில்லை.இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை மட்டுமே எடுத்தது. அதில் அதிகபட்சமாக விராட் கோலி 72 பந்துகளில் 113 ரன்களை அடித்திருக்கிறார்.

பின்னர் வந்த ராஜஸ்தான் அணி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் எந்த ரன்கள் எடுக்கமால் வெளியேறினார். அதன் பின் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் உடன் இணைந்த பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார்கள். இதில் ஜாஸ் பட்லர் 100* ரன்களும் சஞ்சு சம்சன் 69 ரன்களையும் அடித்து இருந்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களிலேயே வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு பேசிய ராஜஸ்தான் அணி வீரர் பட்லர் பேசுகையில் கொஞ்சம் அதிர்ஷ்டம் ஆனால் அது நன்றாக முடிந்தது. வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி. எவ்வளவு நேரம் நீங்கள் விளையாட்டை விளையாடுகிறீர்கள் என்ற அந்த கவலை மற்றும் அழுத்தங்கள் உங்களுக்கு இருக்கும். அது எளிதானது கிடையாது. மனம் ஒரு சக்தி வாய்ந்த விஷயம். எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துப் பாருங்கள். நீங்கள் சிறப்பாகச் செய்த காரியங்களில், கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள் அதில் எந்த ரகசியமும் இல்லை. வழியில் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை என்றார் பட்லர்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “கடந்த ஆட்டத்தில் நான் மிகவும் நன்றாக உணர்ந்தேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் தென்னாப்பிரிக்காவில் ஒரு நல்ல போட்டியை கொடுத்ததாக உணர்கிறேன். பின்னர் அதனை முடிந்து கொண்ட ஐபிஎல்க்கு ஒரு சின்ன இடைவெளி விட்டு வருகிறேன். இதனால் தொடக்கத்தில் இருந்து நான் கொஞ்சம் போராடினேன். மீண்டும் நன் ஆட்டத்திற்குள் வர எனக்கு ஒரு இன்னிங்ஸ் தேவைப்பட்டது இப்போது போட்டியை எதிர்நோக்குகிறேன் என்று பட்லர் கூறினார்.





