ஐபிஎல் 2023 இன் 39வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே மே 1 அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்தது. அதில் முதல் சம்பவம் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு பீல்டிங்கின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் சில போட்டிகள் இந்த ஐபிஎல் சீசனில் விளையாட முடியாது. இரண்டாவது சம்பவம் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே பெரும் வாங்குவாதம் ஏற்பட்டது.

அதாவது அந்த போட்டியின் போது விராட் கோலி மற்றும் கெளதம் கம்பீர் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. மேலும் ஊடகங்களில் இது தலைப்பு செய்தியாகவும் வந்தது. ஏனென்றால் இவர்கள் இருவருக்குமே சில காலமாக வாக்குவாதம் இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக இதுபோன்று நடக்காது நிலையில் திடீரென இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சோசியல் மீடியாவில் விராட் மற்றும் கம்பீர் ரசிகர்களிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்ளும் அளவிற்கு அந்த வாக்குவாதம் சென்றது. கிட்டத்தட்ட ஐபிஎல் முடிந்து பல வாரம் இந்த விஷயம் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டிங் ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில் கம்பீர் மற்றும் விராட் கோலி இடையே நடந்த இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் கேப்டானான கபில் தேவ்.

அவர் கூறுகையில் “பிசிசிஐ நல்ல குடிமக்களாக இருக்க வீரர்களை வளர்க்க வேண்டும். ஐபிஎல் போட்டியில் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இடையே நடந்தது எனக்கு வேதனையாக இருந்தது. எனக்கு பிடித்த இரண்டு முக்கிய நபர்களான விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்டர்களில் ஒருவர், கம்பீர் இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர்களால் எப்படி இப்படி நடந்து கொள்ள முடிகிறது? ஆனால் லே முதல் டான் பிராட்மேன் வரை என பல விளையாட்டு வீரர்கள் தங்கள் மனதை இழக்கிறார்கள் என்றார் கபில் தேவ்.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் கம்பீருக்கு இடையே நடந்த இந்த மோதலின் காரணமாக விராட் கோலி மற்றும் கபீருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவிகிதம் அபராதமாகவும், நவீன் உல் ஹக்கிற்கு 50 சதவிகிதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது குறிபிடத்தக்கது. மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு கம்பீர் தான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்ற காரணத்தியும் கூறியிருந்தது குறிப்பிடதக்கது.





