ஐபிஎல் 2023 சீசனில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போட்டிகளை நாம் பார்த்து வருகிறோம். அப்படியொரு சூழ்நிலையில் தான் நேற்று ஐபிஎல் 16 சீசனில் 10லீக் ஆட்டம் ஆட்டம் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்தது. இதில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆனால் அது அவர்களுக்கு சரியாக அமையாததால், ஹைதராபாத் அணி 50 ரன்களில் மூன்று பெரிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்தது.

முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் பல விக்கெட்டுகளை மளமள வென்று வீழ்த்தியது லக்னோ அணி. ஆனால் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ராகுல் த்ரிபாதி கவனமாக இருந்து 41 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரும் அமித் மிஸ்ராவின் அருமையான கேட்ச்சால் அவுட் ஆக 20 ஓவர்கள் முடிவில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இந்நிலையில் 122ரன்கள் இலக்காக துரத்திய லக்னோ முதல் சில ஓவர்களிலேயே தேவையான ரன்களை குவித்தது. அதோடு தேவைப்படும் ரன்கள் மீதமுள்ள பந்துகளை விடவும் குறைவாக இருந்ததினால் கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் அணியை உடைக்க 6 வது ஓவரில் ஹைதராபாத் மயங்க் அகர்வாலை களமிறக்கியது. கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் இணைந்து 35 ரன்கள் எடுத்த நிலையில் கைல் மேயர்ஸை முதல் விக்கெட்டை இழந்தார்.

அப்படியொரு நிலையில் தான் ஹைதராபாத்தில் முதல் விக்கெட்டை எடுத்த சன் ரைசெர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் செல்வி காவ்யா மாறன் ஆனந்தத்தில் குதித்தார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இருந்த போதிலும் ஹைதராபாத் அணியால் தாங்கள் எடுத்த குறைந்த ரன்களை மட்டுமே வைத்து தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியடைத்தனர். இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி ஐபிஎல் 2023 பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
Sunrisers Owner Kavya Maran Reaction for Kyle Myers Wicket. 😝 pic.twitter.com/IoPCc8kTYr
— KaRuN (@KarunakarkarunN) April 7, 2023
இந்நிலையில் இந்த தோல்விக்கு காரணம் டேவிட் வர்னரை கேவலப்படுத்தியதுதான் என்று கூறப்படுகிறது. என்னேற்றால் சன் ரைசெர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிக வருடங்கள் கேப்டன் பதவியில் இருந்தவர் டேவிட் வார்னர். அவர் தலைமையில் 2016ஆம் ஆண்டு ஒரு கப்பும் அடித்திருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட டேவிட் வார்னரை வாட்டர் பாட்டில் எடுத்துச்செல்லும் டேவிட் வார்னர் கடைசியாக SRHல் இருந்த போது நடந்தது. அப்போது டேவிட் வார்னர் அவமானத்தால் அழுகவும் செய்தார். இந்நிலையில் அதுதான் தற்போது சன் ரைசர்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ள தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது
— VK fanatic (@VKfanatic111) April 7, 2023
காவியா மாறன் வேறு யாரும் கிடையாது உலக புகழ் பெட்ரா சன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனருமான கலாநிதி மாறனின் ஒரே மகள் ஆவார். அதே போல ஐபிஎல் ஏலத்தின் போது கூட ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், மகள் சுஹாசினி கான், பஞ்சபாணியின் உரிமையாளர் ப்ரீதி ஜிந்தா போன்டர்வர்கள் இருந்த போதிலும் காவிய மாறன் அதிகம் பிரபலமாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டது குறிப்பிடதக்கது.




