ஐபிஎல் 2023 கடந்த மாதம் தொடங்கி தற்போது மைய கட்டத்தை எட்டியுள்ளது. பல அணிகள் 7 போட்டிகள் வரையில் விளையாடி தங்களுடைய பலம் மற்றும் பலவீனம் இரண்டையுமே சரியாக தெரிந்து வைத்திருக்கின்றனர். சில அணிகளில் காயம் காரணமாக முக்கிய வீரர்கள் விலகியதால் போட்டியில் சரியாக விளையாடவில்லை. அதே சமயம் சில அணிகளில் நட்சத்திர வீரர்கள் விலகினாலும் கூட இருக்கின்ற வீரர்களை வைத்துக்கொண்டு வெற்றிபெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அப்படி காயம் காரணமாக டெல்லி அணியில் இருந்து விளக்கியவர் தான் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு கார் விபத்தில் பலமான காயங்கள் அடைந்து தற்போதுதான் உடலை தேற்றி வருகிறார். ஆனாலும் வரும் உலக கோப்பை மற்றும் இந்தியா விளையாடும் சில சர்வதேச போட்டிகளில் ரிஷப் பண்டால் விளையாட முடியாது. இதனால் இவருக்கு பதிலாக ஒரு மாற்று வீரரை இந்தியா தேடிவருகிறது. ஆனாலும் சரியான மாற்று வீரர் இன்னமும் கிடைக்கவில்லை.
அப்படிப்பட்ட நிலையில் தான் ரிஷப் பண்டிற்கு மாறாக இவர் சரியாக இருப்பார் என்று பாராட்டியுள்ளார் கெவின் பீட்டர்சன்.அவர் கூறியதாவது “இந்திய அணியில் ரிஷப் பண்டிற்கு பதிலாக வேறொருவர் கிடைத்து விட்டார். அவர் தான் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான ஜிதேஷ் சர்மா. அவர் சிறப்பான விகேட் கீப்பர் பேட்ஸ்மேன். ரிஷப் பண்ட் குணமாக இன்னும் சிறிது காலம் ஆகினால் அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

கடந்த சனிக்கிழமையன்று மும்பைக்கு எதிராக அவர் ஏழு பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் உட்பட 25 ரன்கள் எடுத்தது மேட்ச் வின்னிங்கிற்கு உதவியாக இருந்தார் என்று பீட்டர்சன் தெரிவித்திருந்தார்.சமீபத்தில் வீரேந்திர சேவாக் கூட கடந்த 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 போட்டியில் ஜிதேஷ் சர்மாவை போடலாம் என்று குறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தான் தற்போது கெவின் பீட்டர்சனும் கூறியுள்ளார்.
LSG couldn't even hit a single six during the last overs.
— Rahul Sharma (@CricFnatic) April 22, 2023
And this man smashed four sixes in just 7 balls.
Talk about creating a real impact.
Jitesh Sharma, take a bow. pic.twitter.com/XpMRB5V8A7
சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தும் ஜிதேஷ் சர்மா கடந்த சீசன் அடிப்படை விளையான 20 லட்சத்திற்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். இதுவரையில் கடைசியாக களமிறங்கிய சிறப்பான ஆட்டத்தையே ஜிதேஷ் சர்மா காட்டியிருக்கிறார். இந்த சீசனை பொறுத்தவரையில் அவர் 7 போட்டிகளில் 145 ரன்களுடன் 149.98 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்து வருகிறார். MI vs PBKS போட்டியில் கோடா 7 பந்துகளில் 4 சிக்ஸர்களை பிறக்கவில்லை 25 ரன்களை எடுத்து கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.





