தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா அணி குஜராத் அணியை வெற்றி கொண்டது. ஆனால் இந்த வெற்றி கொல்கத்தா அணிக்கு கிடையாது ஒரு தனி நபருக்கு என்று சொல்லலாம். ஏனென்றால் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை பட்ட நிலையில் கொல்கத்தா அணி தொன்று விட்டது என்று நினைத்தார்கள். ஆனால் அதிரடியாக ஆடிய சிங்கு கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து ஐபிஎல் வரலாற்றில் யாருமே செய்யாத சாதனையை செய்து அனைவரையும் வாயடைக்க வைத்தார்.

முடியவே முடியாது என்று இருந்த நிலையில் எங்கேயோ தெரிந்த வெளிச்சம் போல திடீரென களத்தில் இறங்கி ரிங்கு செய்த மந்திரம் இன்னும் பல காலங்களுக்கு ரசிகர்கள் மனதில் இருந்து மறையாமல் இருக்கும். ஆனால் இப்படி பல சாதனைகளை படைத்த ரிங்கு சிங் சாதாரண ஒரு குடும்பத்தில் இருந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளார். ஏனெற்றால் அவரது அப்பா கேஸ் சிலிண்டர் போடுபவர், சகோதரர் ஆட்டோ ஓட்டுபவர்.
ஆனாலும் தன்னுடைய விடா முயற்சியாலும் தன்னபிக்கையினாலும் இந்த நிலைமைக்கு அவர் வந்துள்ளார். ஒரு கட்டத்தில் துடைக்கும் வேலைக்கு செல்ல இருந்த ரிங்கு சிங் அது வேண்டாம் என்று படிப்படியாக முன்னேறி ஐபிஎல் போட்டிகளில் 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். சொல்லப்போனால் அதுதான் குறைந்த பட்ச விலை. இருந்தாலும் அந்த 20 லட்சம் என்பது ரிங்கு சிங் குடும்பம் இருந்த நிலைமையில் அவருக்கு மிகப்பெரிய விஷயமாக தோன்றியுள்ளது. அதனையடுத்து தொடர்ந்து தன்னுடைய திறமையை காட்டி வந்த ரிங்கு தற்போது பிற உதவிகளையும் செய்து வருகிறார்.

ஏழை மாணவர்களுக்கு பயிற்சி :
ரிங்கு களத்தில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதில் உறுதியாக உள்ளார். அலிகாரில் உள்ள தங்கும் விடுதிகளில் முதலீடு செய்வதன் மூலம், அங்குள்ள இளைஞர்கள் தங்கள் கிரிக்கெட் கனவுகளைத் தொடர ரிங்கு இலவச கிரிக்கெட் பயிற்சி மற்றும் அத்தியாவசிய வசதிகளை வழங்குகிறார். 50 லட்சம் செலவில் திட்டமிடப்பட்டுள்ள இந்த விடுதியில் 14 அறைகள், தலா நான்கு பயிற்சியாளர்கள் தங்கும் வசதி, தனிக் கழிப்பறைகள், கேன்டீன், ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கான பெவிலியன்கள் ஆகியவை இடம்பெறும்.
Rinku Singh is finally getting the recognition he deserves, my man has come a long way 🥹♥️ pic.twitter.com/hWp1qVJXgp
— retired ICT fan (@anubhav__tweets) April 9, 2023
ரிங்கு சிங்கின் பயணத்தில் உறுதிப்பாடு, கடின உழைப்பு இவற்றை பற்றிய பாடத்தை அளிக்கும். அவரது இந்த செயல் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவித்து பின்தங்கிய இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க உதவும். சரியான மனநிலை மற்றும் ஆதரவுடன் எவரும் சிறந்து விளங்க முடியும் என்பதை அவர்களுக்கு இதன் மூலம் தெளிவு படுத்தலாம். ரிங்கு சிங்கின் அடுத்த கட்டத்தை இனிதான் நாம் பார்க்க போகிறோம். ஆனால் அந்த வரலாறு கண்டிப்பாக கிரிக்கெட் உலகில் பலரை ஊக்குவிக்க உதவும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.





