கடந்த மே ஒன்றாம் தேதி நடந்த ஆர்சிபி மற்றும் லக்னோவிற்கு எதிராக போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி 20 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்த போதிலும் லக்னோ அணியால் அந்த சிறிய ஸ்கோரை கூட சமாளிக்க முடியாமல் தோல்வியை தழுவியது. இந்நிலையில் அந்த தோல்விக்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது லக்னோ கேப்டன் கேஎல் ராகுலுக்கு ஏற்பட்ட காயம் தான். அதாவது அந்த போட்டியின் இரண்டாவது ஓவரில் சென்னை அணி 4 ரன்களை கேஎல் ராகுல் தடுக்க சென்றபோது கீழே விழுந்தார்.

அப்போது அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் திணறினார். அதற்கடுத்து மருத்துவக்குழு உதவியுடன் அவர் பெவிலியனுக்கு திரும்பினார். ஆனாலும் அந்த போட்டியின் கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார். இருந்த போதிலும் லக்னோ அணியால் வெற்றி பெற முடியாவில்லை. இந்நிலையில் அதற்கடுத்த போட்டிகளில் ராகுல் ஆடாத நிலையில் இன்று கேஎல் ராகுல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
கே.எல்.ராகுல் இன்ஸ்டா பதிவு :
அந்த பதிவில் “மருத்துவக் குழுவுடன் கவனமாக பரிசீலித்து கலந்தாலோசித்த பின்னர் தொடையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் என்னுடைய உடலை சரிபடுத்துவதில் முழு கவனம் செலுத்துவேன். இது ஒரு கடுமையான முடிவு தான். ஆனால் முழு உடல் தகுதியிடன் இருப்பது சரியானது என்று எனக்கு தெரியும். லக்னோ அணியின் கேப்டனாக இந்த முக்கியமான நேரத்தில் அவர்களுடன் இருக்க முடியாது என்பது வருத்தமாக இருக்கிறது.
View this post on Instagram
ஆனால் எங்கள் அணியின் வீரர்கள் இந்த நேரத்தில் எப்போதும் போல செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். நான் கண்டிப்பாக அணைத்து போட்டிகளையும் பார்த்து உங்களுக்கு உற்சாகத்தை அளிப்பேன். மேலும் பதிவிட்டுள்ள கேஎல் ராகுல் “எடுத்த மாதம் ஓவலில் நடக்கும் உலகக்கோப்பை போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடியாது. நான் விரைவில் இந்திய அணிக்கு விளையாட என்னால் முடிந்த அனைத்தையுமே செய்வேன். அது முக்கியமானதாக வைத்துள்ளேன்.
என்னுடைய ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கடினமான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருக்கும் லக்னோ அணியின் நிர்வாகத்திற்கும் பிசிசிஐக்கும் என்னுடைய நன்றி. நீங்கள் ஊக்கப்படுத்தால் என்னை மீண்டும் முன்பை விட பலமாக வரவைக்கும். இந்த நேரத்தில் நான் கண்டிப்பாக என்னுடைய உடல் நிலை குறித்து உங்களுக்கு கண்டிப்பாக தெரிவிப்பேன்.

கடைசி சில நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது, காயம் ஏற்படுவது எனபது எப்போதுமே சிறிய விஷயம் கிடையாது. ஆனால் நான் கண்டிப்பாக முழு முயற்சி செய்வேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என்று பதிவிட்டிருக்கிறார் கேஎல் ராகுல். இந்நிலையில் கேஎல் ராகுல் ஐபிஎல் போட்டியில் இருந்தும் வரும் உலகக்கோப்பையில் இருந்தும் வெளியேறிய நிலையில் வெளியேறுவதாக கூறிய நிலையில் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்திற்கு உள்ளகி உள்ளனர்.





