இந்தியன் பிரீமியர் லீக்கில் 50வது ஆட்டம் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஃபஃப் டு பிளெசிஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதே நேரத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பு விராட் கோலி செய்த விஷயம் பற்றிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிற்து.

அதாவது இந்த போட்டயில் இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் விராட் கோலி தனது சொந்த ஊரான டெல்லியில் டெல்லிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டிக்க்கு முன்னர் பயிற்சி செய்து கொண்டிருந்த விராட் கோலி தன்னுடைய சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவை மைதானத்தில் சந்தித்தார். விராட் கோலி உடனடியாக அவரிடம் சென்று தனது பயிற்சியாளரின் கால்களைத் தொட்டு வணக்க்கினார்.
அதன் பிறகு பயிற்சியாளர் ராஜ்குமாரும் விராட் கோலியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர் அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் போட்டியை பற்றி பேசுகையில் அணிக்கு டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதற்கு பிறகு விக்கெட்டுகள் விழுந்தாலும் நம்பிக்கை சேர்க்கும் வகையில் விளையாடி வந்த விராட் கோலி தன்னுடயை அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
A wholesome meet & greet 🤗@imVkohli catches up with his childhood coach 👌🏻👌🏻#TATAIPL | #DCvRCB | @RCBTweets pic.twitter.com/YHifXeN6PE
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
முகேஷ் குமார் வீசிய பந்தில் விராட் கோலி அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு பக்கம் அற்புதமாக விளையாடிய லோம்ரோர் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களை நான்கு பக்கமும் சிதறடித்து வர அவருடன் இணைந்த தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் தனது அதிரடியை காட்டி ரன்களை உயர்த்தி வர 11 ரன்களில் அவரும் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 181 ரன்களை குவித்தது.

இந்நிலையில் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடஸ் அணி தொடக்கமே மிகவும் சிறப்பாக இருந்தது. முதல் களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் சால்ட் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். இந்நிலையில் 4 ஓவர்கள் சிக்ஸர்களும் 4கலுமாக 41 ரன்களை எடுத்திருந்தது டெல்லி கேபிடல்ஸ். இந்நிலையில் 5வது ஓவரை சிராஜ் போட வந்தார். அப்போது முதல் இரண்டு பந்துகளில் 2சிக்ஸர்களை விளாசினார் சால்ட்.

இதற்கடுத்த வார்னர் அவுட்டான நிலையில் மார்ஸ் களமிறங்கிய 6சர்களை விளாசினார் பவர்பிளேயில் டெல்லி 70 ரன்கள் எடுத்தது. அதனை டெல்லி வேகமாக ரன் குவித்தது. பிலிப் சால்ட் 28 பந்துகளில் அரைசதம் அடிக்க ஹர்ஷல் படேல் ஓவரில் 24 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து சால்ட் அண்ட் ருஸ்ஸோ ஆர்சிபியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்து கொண்டிருந்தனர். இறுதியில் டெல்லி அணி டெல்லி அணி 16, 4 ஓவர்களில் வெற்றி பெற்றது.





