ஐபிஎல் 2023தொடரின் 51வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்நிலையில் டாஸை வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் சிறப்பாக விளையாடியது.

அதிரடியாக ஆடிய விர்த்திமான் மிகவும் சிறப்பாக விளையாடினார் 20 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதே நேரத்தில் சுப்மன் கில் 51 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரையும் தவிர ஹர்திக் 25 ரன்களும், மில்லர் ஆட்டமிழக்காமல் 21 ரன்களும் எடுத்தனர். இறுதியில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்களை விளாசியது.
இந்நிலையில் 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய லக்னோ சிறப்பான தொடக்கத்தை பெற்றது. இருப்பினும் அரை சதத்தை தவறவிட்ட கைல் மேயர்ஸ் வடிவில் முதல் அடி லக்னோ அணிக்கு கிடைத்தது. அவர் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இதையடுத்து குயின்டன் டி காக் அரைசதம் அடித்தார். முடிவில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

க்ருனால் பாண்டியா பேட்டி :
இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் பேசிய க்ருனால் பாண்டிய கூறுகையில் “நாங்கள் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். 227 ரன்கள் என்பது மிகவும் அதிகமா தான். இதனால் 227 சேசிங் செய்யும் ரங்களாக இருக்கும் போது ஒவ்வொரு ஓவரிலும் கடுமையாக உழைக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய இது ஒரு நல்ல சரியாக மேற்பரப்பு. நாங்கள் ஒருவேளை அவர்களை 200 – 210 ரங்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால், எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

மேலும் தன்னுடைய சகோதரர் ஹர்திக் வெற்றி பெற்றதையடுத்து மகிழ்ச்சியடைந்த க்ருணால் பாண்டியா, தனது தாயைப் பற்றி பேசுகையில் “எங்களின் குடும்பம் மிகவும் பெருமையாக இருக்கிறது. அம்மா மகிழ்ச்சியாக இருக்கிறார். நாள் முடிவில் இரண்டு புள்ளிகள் மட்டுமே வீட்டிற்கு வரும் என்று அவர் கூறினார். எனக்கும் ஹர்திக்கும் இடையே சிறப்பான ஒரு பிணைப்பு இருக்கிறது என்று கூறினார் க்ருனால் பாண்டியா.





