ஐபிஎல் 2023 க்கான 30 லீக் போட்டியில் லக்னோவில் உள்ள ஏகன மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும் லக்னோ அணியும் மோதின. டாஸ் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியின் தொடக்க அட்டகரர்கள் கில் மற்றும் சாஹா பேட்டிங்கில் களமிறங்கினர்கள். ஆரம்பம் முதலே தொடக்க அட்டகரர்கள் லக்னோ அணியின் பௌலிங்கை சமாளிக்க கஷ்டப்பட்டு வந்தனர். கில் ரன் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார்கள்.

அதன் பின் வந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியின் ஸ்கோர்ரை உயர்த்த பொறுமையாகவே விளையாடி வந்தார். 7 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் 44 ரன்களில் மட்டுமே இருந்தது. க்ருனால் பண்டியாவின் சுழலை தாக்குபிடிக்க முடியாமல் சாஹா 47 ரன்களிலே வெளியேறினார். இந்நிலையில் பேட்டிங் செய்ய வந்த மனோகர் 3 ரன்களிலே விக்கெட்டை இழந்து வெளியேறினார். லக்னோ அணியின் பந்து வீச்சி சிறப்பாகவே இருந்தது.வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பல் நிலையிலே இருந்தது.
அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதன் பின்னர் தனது அதிரடியை காட்ட தொடங்கினரர். ரவி பிஷ்னோய் ஓவரில் 2 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரியையும் அடித்து விளாசினார். அந்த நிலையில் இருந்து அணியின் ஸ்கோர் மட மடவென உயர்ந்த முயற்சி செய்தார். ஹர்திக் பண்டியாவும் தந்து அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஸ்டனின்ஸ் ஓவரில் 66 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். ஆரம்பம் முதலே குஜராத் அணி பேட்டிங்கில் சொதப்பிய நிலையிலே இருந்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது.

இந்நிலையில் லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடிய விருத்திமான் சாஹா 47 ரன்களில் க்ருனால் பந்தில் சிக்ஸருக்கு சஹா ஆட்டமிழந்தார். நான்-ஸ்டிரைக்கில் நின்று கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா மிகவும் சோகமாக காணப்பட்டார். அதே நேரத்தில் புதிய பேட்ஸ்மேன் அபினவ் மனோகர் பேட்டிங் செய்ய வந்தபோது, ஹர்திக் பாண்டிய தன்னுடைய சகோதருக்கு முன்னாள் கவனமாக பேட்டிங் செய்யுமாறு அறிவுரை கூறினார்.
— Nitish Kushwaha (@official_nitis) April 22, 2023
இந்நிலையில் அடுத்ததாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி சிறப்பாக பந்து வீசியது என்று சொல்ல முடியாது ஏனென்றால் ரஷித் கான் மட்டுமே ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கு பிறகு ஒரு விக்கெட்டுகள் கூட வரவில்லை. கேப்டன் கேஎல் ராகுலும் சரியான ஆட்டத்தை ஆடி 38 பந்துகளில் அரை சத்தம் அடித்தார். இந்த செய்தியை எழுதும் வரையில் லக்னோ அணி 14.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.





