நாளை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே ஆஃப் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐபிஎல்லில் வந்தவுடனேயே கப்பை வென்று தற்போது இராணுவதாக இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்கும் குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத இருக்கின்றனர். இரண்டு அணிகளுமே இந்த ஐபிஎல் தொடரில் மிகப் பிரமாதமாக விளையாடி இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த குவாலிஃபையர் 1ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் குஜராத் டைட்டன்ஸ் தோல்வியடைந்த போதிலும், குவாலிஃபையர் 2 இல் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விளையாடியபோது ஜிடி முற்றிலும் மாறுபட்ட அணியாகத் தெரிந்தது. சொல்லப்போனால் பந்துவீச்சிலும் சரி பேட்டிங்கிலும் சரி சிறப்பான அணியின் செயல்திறனை வெளிப்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் இரண்டாவது முறையாக குஜராத் பைனலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாளை சென்னைக்கு எதிராக குஜராத் பைனலில் விளையாடும் நிலையில் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங், இர்பான் பதான் மற்றும் முகமது கைஃப் ஆகியோர் மிக முக்கியமான இறுதிப் போட்டி குறித்து சுவாரஸ்யமான கணிப்புகளை முன்வைத்துள்ளனர்.

முகமது கைஃப் :
முகமது கைஃப் கூறுகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியினர் அவர்களுடைய மைதானத்தில் சென்னை அணியை வென்றிருக்கின்றனர். அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத்தை சேப்பாக் மைத்தனத்தில் குவாலிபயர் ஒன்றின் போது வீழ்த்தியிருக்கின்றனர். எனவே இந்த பைனல் மிகவும் கடுமையான போட்டியாக இருக்கும் என்றார்.
ஹர்பஜன் :
“இந்த அணி அதிக முறை இறுதிப் போட்டியை எட்டியுள்ளது, ஏனெனில் அதன் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய அணியின் ஒவ்வொரு வீரரின் திறனையும் நம்புகிறார்கள். அதில் முக்கியமான காரணம் என்னவென்றால் சென்னை அணியின் கேப்டன் தனது சக வீரர்களை நம்புகிறார் மற்றும் உலகின் புத்திசாலித்தனமான கிரிக்கெட் மனதில் ஒருவராக இருக்கிறார். – அவர் பெயர் மகேந்திர சிங் தோனி என்றார் ஹர்பஜன் சிங்.

இர்பான் பதான் :
மேலும் மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பேசுகையில் “இந்த போட்டி குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான உணர்வு பூர்வமான போட்டியாக இருக்கும். நான் குஜராத்தை சேர்ந்தவன் தான் ஆனால் எனக்கு எம்.எஸ். தோனியை மிகவும் பிடிக்கும். தோனி அடுத்த ஆண்டு விளையாடுவரா என்று தெரியவில்லை, இருந்தாலும் தோனி காரணமாக சென்னை அணியின் இதயங்கள் துடிப்பு அதிகரிக்கிறது என்றார் இர்பான் பதான்.





