ஐபிஎல் 2023 தற்போது முடிவு கட்டத்தை நெருங்கி வருகிறது இன்னமும் சில போட்டிகள் மட்டுமே அணைத்து அணிகளுக்கும் இருக்கிறது. அந்த வகையில் சென்னை அணி சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் சென்னை அணியின் DJ தற்போது சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறார்.
#ThalaDhoniEntry #CSK vs #DC #Padayappa
— VDJ Zen (@vdjzen) May 11, 2023
Don't Miss the Last 20 Seconds ! #ChennaiSuperKings #CSk #Yellove #Anbuden #Tataipl2023 #MSD #mahendrasinghdhoni #Thala #t20 #DelhiCapitals #DavidWarner@CSKFansOfficial @ChennaiIPL pic.twitter.com/DxXetzDxhv
குறிப்பாக மகேந்திர சிங் தோனி மைதானத்திற்குள் துளையும் போது ரசிகர்கள் அனைவரையும் அதிரவைத்தவர் டிஜே ஜென். இவர் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் போது விதவிதமான பாடல்களை போட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். சமீபத்தில் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியின் போது கூட விராட் கோலிக்கு போற்கண்ட சிங்கம் பாடலை போட்டிருந்தார் அது பயங்கரமாக வைரலாகி இருந்தது.
அதே போல வார்னருக்கும் நாட்டு நாட்டு பாடலை போட்டு அசத்தியிருந்தார். அது சோசியல் மீடியாவில் பெரும் வைரலாகியது. அதோ போல பல நேரங்களில் DRS, TIME OUT போன்ற நேரங்களில் பாடல்களை போட்டு மைதானத்தயே தெறிக்க விடுவார். அப்படியொரு நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடர்ல் சேப்பாக்கம் மைதானத்தில் டிஜே ஜென் கடந்த சில நாட்களாக செய்து வரும் சம்பவம் பெருமளவு வைரலாகி வருகிறது.
🥁 Because, I just had to! 🥁
— Sa. Gomesh | ச. கோமேஷ் (@SaGomesh) May 3, 2023
Spoke to DJ Zen and Prashanth – on how they work, pick songs to be played at Chepauk for @ChennaiIPL games and how the scene has changed in the last few years – and some of the fans who have been part of the experience over the years. #IPL2023 https://t.co/nJcsLdFSpu pic.twitter.com/MHXz9NEzbx
அதாவது தோனி கடந்த 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கும் போது விக்ரம் படத்தில் வரும் once upon a time பாடலை போட்டு மைத்தனத்தையே அதிர வைத்தார். அந்த சம்பவம் பெரிய அளவு வைரலாகியது. அதற்கு பிறகு KGF படத்தில் வரும் toofan toofan பாடல் பெரும் அளவு வைரலாகியது. அதற்கு பிறகு பாஷா பாடல், திரை தீப்பிடிக்கும், படையப்பா BGM, சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு என தோனிக்கு பொருந்தும் வகையான பாடல்களை போட்டு வைரலாகி வருகிறார்.

இவர் போடும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெட்ரா நிலையில் அடித்த போட்டியில் எந்த பாடலை இவர் போட இருக்கிறார் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனை தவிர்த்து புள்ளி பட்டியலை பார்க்கும் போதும் 12 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகள் எடுத்து 2 வது இடத்தில இருக்கிறது. மேலும் நாளை சென்னை அணி கொல்கத்தா அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.





