ஐபிஎல் 2023 லீக்கில் 49 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னையில் உள்ள எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் மோதின. சென்னை அணிக்கு கடந்த போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டதால் 1 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. மற்றொரு புறம் மும்பை அணி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார்.

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி வீரர்கள் யாரும் சரியாக ஆடாத நிலையில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவு 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை விளாசியது. 140 ரன்கள் எடுத்தால் என்று களமிறங்கிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள் இறுதியில் சென்னை அணி 14 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 13 வருடங்கள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் மும்பைக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி.
இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனை பொறுத்தவரையில் இதுவரை சென்னை அணிக்காக மதிச பத்திரனா சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். முக்கியமான சந்தர்ப்பங்களில் அணிக்கு வெற்றியைக் கொண்டு வந்துள்ளார். அதே போல இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட பதிரினா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் போட்டி முடிந்ததும் எப்போதும் போல சென்னை அணியின் குட்டி மலிங்கா பதிரினாவை புகழ்ந்து பேசிய தோனி அவருக்கு சிகப்பு பந்து விளையாட்டு வேண்டாம் என்றார்.

பதிரான பேட்டி :
இந்நிலையில் தான் போட்டிக்கு பிறகு பேசிய பதிரான கூறுகையில் “CSK உடனான எனது பயணம் கடந்த ஆண்டிலிருந்து தொடங்கியது, நான் கடந்த சீசனில் சென்னை அணியின் மாற்று வீரராக நுழைந்து இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினேன். ஆனால் இந்த சீசனில் நான் அதிக போட்டிகளில் விளையாடுகிறேன், இதனால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறார்கள்.

டி20 கிரிக்கெட்டில் என்னுடைய இந்த சிறந்த பந்துவீச்சு மற்றும் செயல்திறன் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து பேசிய புதிரான கூறுகையில் நான் “கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகன் எனவே தான் விக்கெட்டை எடுத்த பிறகு அதனை அப்படி கொண்டாடுகிறேன் என்று கூறினார் பதிரான.





