ஐபிஎல் 2023 க்கான 33லீக் போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி எதிர்கொண்டன. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரானா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அற்புதமாக விளையாடி வந்தனர். கான்வே அற்புதமாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். ருதுராஜ் 35 ரன்களில் வெளியேற, அவர் சென்ற உடனே கான்வே 56 ரன்களில் வெளியேறினார்.
Going..Going..GONE 💥
— IndianPremierLeague (@IPL) April 23, 2023
Which was your favourite shot from @ajinkyarahane88's magnificent knock tonight? #TATAIPL | #KKRvCSK pic.twitter.com/VLSa7XQ6NB
அதன் பின் ரஹானே மற்றும் டுபே கூட்டணி அமைத்து கொல்கத்தாவின் பந்து வீச்சளரை அனைத்து பக்ககளிலும் அடித்து வான வேடிக்கையை காட்டினார்கள். 16 பந்துகளிலே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்தனர். இந்த கட்டத்தில் துபே 20 பந்துகள் அரை சத்தம் அடிக்கும் நேரத்தில் ஆட்டமிழக்க ரஹானே தொடர்ந்து விளையாடி 29 பந்துகளில் 19 ரன்கள் விலாசினார். இதனால் 20 வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களை குவித்தனர் சென்னை அணி.
இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒட்டுமொத்த அணியும் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை மூலம் இந்த ஐபிஎல் தொடரில் முதல் இடத்திற்கு முன்னேறியது சிஎஸ்கே. இந்நிலையில் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் அஜிங்க்யா ரஹானே.
Rahane scores so far in this season
— No.7 (@SuperThala7) April 23, 2023
61(27) vs MI.
31(19) vs RR.
37(20) vs RCB.
9(10) vs SRH.
71*(29) vs KKR.
RAHANE RAMPAGE version 2.0 reloaded 🔥🔥🔥#CSKvsKKRpic.twitter.com/gv4tvGzpOJ
"Haha another Test player selected by CSK."
— MAHI (@mahi_tweetss) April 24, 2023
Ajinkya Rahane :#Rahane #AjinkyaRahane #CSKvKKR pic.twitter.com/6D1phGckJU
இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களின் சிக்ஸர்களை அஜிங்க்யா ரஹானே தனது அதிரடி பேட்டிங்கால் பந்துகளை நாலாபுறமும் விளாசினார். அஜிங்க்யா ரஹானே 24 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்து 29 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இதன் போது 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் பவுண்டரி லைன்களுக்கு விரட்டினார். சொல்லப்போனால் இந்த ஐபிஎல் தொடரில் அஜிங்க்யா ரஹானே மிகவும் அதிர்ச்சியாகவே பேட்டிங் செய்து வருகிறார்.

இம்முறை அவரது பேட்டிங் மிகவும் ஆக்ரோஷமாக மாறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200 ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவித்துள்ளார். கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா உட்பட ஒட்டுமொத்த அணியும் அவரது வேகமான பேட்டிங்கை பார்த்து ஆச்சரியமடைந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 235 ரன்கள் குவிக்க அஜிங்க்யா ரஹானே முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.





