ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை நடக்கும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றனர். இதுவே ஐபிஎல் 16சீசனில் சென்னை மற்றும் மும்பை நேருக்கு நேராக மோத இருக்கும் முதல் போட்டி என்பதினால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இமயத்தை தொட்டுள்ளது. மேலும் இந்த போட்டி மும்பை அணியின் சொந்த அரங்கமான வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியை எதிகொள்ள இருப்பதினால் எதிர்பாப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மும்பை அணி ஏற்கனனே ஒரு போட்டியில் தோல்வியடைந்ததால் அடுத்து வரும் போட்டியில் வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மத்தியில் இருக்கிறது. அதோடு வான்கடே மைதானம் மும்பையின் சொந்த மைதானம் என்பதினால் இந்த போட்டியில் வான்கடே தங்களுடைய கோட்டை என்று காட்டுவதற்கு நிடா அம்பானி சில விஷியங்களை செய்திருக்கிறார்.
ஆதாவது மும்பை மைதானத்தில் மற்ற அணியின் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வண்ணம் ஒரு திட்டத்தை திட்டுயுள்ளார் நிடா அம்பானி. அதன் படி மும்பை ரசிகர்களுக்கு என்று தனியாக இரண்டு கேலரியை நிடா அம்பானி முன்பதிவு செய்துள்ளார். எனவே அந்த கேலரிக்குள் மும்பை ரசிகர்களை தவிர மற்ற அணி ரசிகர்கள் அமர அனுமதி கிடையாது. மேலும் அவர்கள் மும்பை இந்தியன் நிற ஆடையை தவிர மற்ற எந்த நிறத்திலும் உடை அணிய கூடாது என்று விதிமுறை விதித்துள்ளது மும்பை அணி நிர்வாகம்.

இந்நிலையில் தான் சென்னை ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானம் மட்டுமின்றி மற்ற அணைத்து மைதாங்களிலும் கூடி வருவது குறித்து மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் கிரண் பொலார்ட் பேசியுள்ளார். அவர் கூறுகையில் மும்பை அணிக்காக சஹசின் டெல்லுகர் எந்த மைதானத்தில் விளையாடினாலும் அவருக்கு மும்பை அணி சொந்த மைதானத்தில் விளையாடுவது போல ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது.

அப்படியொரு ரசிங்கர்களின் ஆதரவு சென்னை அணியின் கேப்டன் தோனிக்கும் இருக்கிறது. தற்போது நடந்துவரும் ஐபிஎல் 2023 தொடரில் அந்த மைதானத்தில் சிஎஸ்கே விளையாடினாலும் அங்கே சிஎஸ்கே ரசிர்கர்கள் கண்டிப்பாக கூடுவார்கள். ஏனென்றால் எம்.எஸ் தோனி சிஎஸ்கே அரசிகர்களுக்காக அதிகம் செய்திருக்கிறார் என்று தெரிவித்தார் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.





