ஐபிஎல் 2023 சீசனில் 12லீக் ஆட்டத்தில் நேற்று நடந்த முதல் சென்னை vs மும்பை போட்டியில் முதலில் டாஸ் வெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச முடிவு செய்தது. இந்நிலையில் தூவக்கம் எப்போதும் போல மும்பை இத்தியன்ஸ் அணிக்கு நன்றாக இருந்தாலும் அவர்களுக்கு காலகாலமாக இருந்து பிரச்சனை மீண்டும் ஏற்பட்டது. தொடக்கம் முதல் 3 பௌண்டரிகள் 1 சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மாவை தேஷ்பாண்டே ஆட்டமிழக்க செய்தார்.

அதில் இருந்துதான் மும்பை அணிக்கு விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. பின்னர் 6.4 ஓவரில் இஷான் கிஷான் ஜடேஜாவின் பந்துல ஆட்டமிழக்க பின்னர் தொடர்ந்து வந்த மும்பை அணியின் பேட்ஸ்மேன்ஸ்கள் அதிர்ச்சி கொடுத்து வெளியேற. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் எடுத்து அதிகபட்சமாக இஷான் கிஷான் 32 ரன்கள் எடுத்தார். ஆனாலும் கூட சென்னை அணியின் அபார ஆட்டத்தினால் சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்களது ரசிகர்களின் எண்ணிக்கை அப்படியேதான் இருக்கிறது. கிட்டத்தட்ட ரசிகர்கள் ஒவொவொரு நாளும் அதிகமாகி கொண்டே தான் செல்கின்றனர். இந்நிலையில் அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

சொல்லப்போனால் அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு 19 வயதிற்கு உட்பட்டோர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணிக்காக விளையாடினார். அதோடு பல உள்ளூர் விளையாட்டு போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஒரு ஆல்ரவுண்டராக சிறப்பான விளையாட்டை கொடுக்கும் சச்சின் டெண்டுல்கர் அவரது அப்பா இருந்த னையான மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.
Arjun Tendulkar Still Practicing In Nets.
— Aufridi Chumtya (@ShuhidAufridi) April 8, 2023
Source ~ Today's Mi Win pic.twitter.com/Es66paafpt
அர்ஜுன் டெண்டுல்கரின் அப்பா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல செய்திருந்தாலும் கூட இன்னமும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. நேற்று நடந்த சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் காயம் காரணமாக விலகிய நிலையில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்றிருந்த நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றாமே மிஞ்சியது.

இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் எப்போதுதான் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்குவீர்கள் என்று விமர்சனம் செய்து ட்விட்டர் பக்கங்களில் ட்ரோல்ல செய்து வருகின்றனர். அவை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு இவர் தொடக்கத்தில் உள்ளீர் கிரிக்கெட் போட்டிகளை மும்பைக்காக விளையாடி வந்தாலும் வாய்ப்பு கிடைக்காததால் கோவா அணிக்கு மாறியது குறிப்பிடதக்கது.





