உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடர்ந்து கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் பல மாற்றங்களும் நடந்துள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி தன்னுடைய கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்குவாட்டிற்கு வழங்கினார். இதனை சிலர் எதிர்த்தாலும் பலர் இன்னும் தோனி தான் எத்தனை காலம் கேப்டனாக இருப்பார் என்று ஏற்றுக்கொண்டனர்.

அதே வேலையில் தோனி ருதுராஜ் கெய்க்குவாட்டிற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் பரிந்துரைத்து ஒரு கேப்டனாக வழிநடத்துகிறார். ஆனால் கடந்த போட்டியில் ஹைதராபாத் அணியிடம் சென்னை அணி தோற்றது. இதற்கு ருதுராஜ் கேப்டன்சியும், தோனியை முன்னரே அனுப்பி இருக்க வேண்டும் என்றும் பலர் விமர்சனம் செய்தனர். ஏனென்றால் தோனி அந்த போட்டியில் 1 பந்து மட்டுமே விளையாடினார்.
ஆனால் அதற்கு முன்பு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய தோனி நாலாபுறமும் அதிரடியாக விளையாடி 37 ரன்களை வெறும் 20 பந்துகளில் அடித்தார். இதனால் ரசிகர்களுக்கு தங்களுடைய அணி தோற்றுவிட்டது என்றே தெரியவில்லை. இந்நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விரைவாக களமிறங்காததுதான் தோல்விக்கு காரணம் என்று சிலர் கூறும் நிலையில் தான் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்த விஷயம் குறித்து பேசினார்.

அவர் கூறுகையில் :அதாவது டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா அல்லது சிவம் துபே போன்ற ஒருவரை விட தோனி முன்பாக களமிறங்க வேண்டும் என்பது சரியாக இருக்குமா என்று தோன்றவில்லை. தோனி 37 ரன்களை விளாசியிருந்த போது கூட அவர் அதை 16-17 பந்துகளில் எடுத்தார். MS தோனியின் பலம் அவரது விக்கெட் கீப்பிங்கில் இருக்கிறது. மேலும் ருதுராஜ் மற்றும் அவரது கேமியோக்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. அவரை நம்பர் 3 அல்லது நம்பர். 4 அவ்வளவு சிறப்பான யோசனையாக இருக்காது என்றார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
இவரை தொடர்ந்து பேசிய முன்னாள் வீரர் கிளார்க் கூறுகையில் “நீங்க சரியா சொன்னிங்க சஞ்சய். தோனிக்கு அது தேவையில்லை. விளையாட்டின் எந்த வடிவத்திலும் அது அவருடைய வேலை கிடையாது. அவர் மேலே சென்று விளையாட சில சந்தர்ப்பங்கள் இருந்திருக்கலாம். நாம் பார்த்ததிலேயே போட்டியை முடிப்பதில் மிகவும் சிறந்தவர் தோனி. அதனால் அவர் அதை மாற்ற வேண்டியதில்லை.

உங்கள் அணியில் எம்.எஸ்.தோனி இருப்பது பற்றிய மற்ற விஷயம் அவருக்கு முன்னால் இருக்கும் வீரர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கம் என்பதுதான். இதனால் போட்டியில் மேலும் சில ஆபத்தான ஷாட்டுகளை விளையாடலாம். சற்று முன்னதாக, அவருக்கு போதுமான வேலைகள் கிடைத்துள்ளன, நீண்ட காலமாக அவர் அதனை செய்து வருகிறார். இந்தமுறை மற்ற வீரர்கள் முன்னேற வேண்டிய நேரம் இது என்று கிளார்க் கூறினார்.




