ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரையில் 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அப்படி வெற்றி பெற்ற சில போட்டிகளில் CSK அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி மிகப்பெரிய பங்கை ஆற்றியது. பொதுவாக மகேந்திர சிங் தோனி கடினமான சூழ்நிலைகளில் அமைதியாக தன்னை வைத்துக் கொள்வார், அது அணி வெற்றிபெறவும் சரியாக சோசிக்கவும் உதவியாக இருக்கும். ஆனால் சில சூழ்நிலையில் மைதானத்தில் வீரர்கள் தன் பேச்சைக் கேட்காதபோது கேப்டன் கூலும் தன்னுடைய நிதானத்தை இழக்கிறார்.
When #captaincool gets angry #dhoni #dieheartfanofdhoni pic.twitter.com/dZAxNJv2ry
— prasannaram (@_Prasanna_jo_) April 26, 2023
அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் 2023ல் மகேந்திர சிங் தோனி இப்படி கோபமாக இருப்பது இதுவே முதல் முறை. ஆர்சிபிக்கு எதிராக சென்னை ஆட்டத்தின் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது, ஆனால் இந்தப் போட்டியில் சென்னை அணியின் பீல்டிங்கும் மிகவும் மோசமாக இருந்தது.
இந்த வீடியோ நேரலை போட்டியின் போது டிவியில் காட்டப்படவில்லை என்றாலும், இது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இருப்பினும் தோனி எந்த வீரர் மீது கோபத்தை வெளிப்படுத்தினார் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. ஆனால் தோனி அப்படி கோவப்பட்டது இதுவே முதல் முறை என்பதினால் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் அதிகம் பகிராப்பட்டு வருகிறது.

ஐபிஎல் 2023 தொடரின் புள்ளி பட்டியலை பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகள் விளையாடி 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 37வது ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளது. இப்போட்டியானது சாவை மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்த வருடம் ஐபிஎல்லில் மோதின, அப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அந்த தோல்விக்கு பிறகு சென்னை அணி தோல்வியின்றி விளையாடி வருகிறது. புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் முதலிடத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 வது இடத்திலும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வெற்றியை பதிவு செய்ய இரண்டு அணிகளுமே முயலும் என்பதினால் சுவாரசியமான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.





