கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தற்போது கோலாகலமாக தொடங்கி உள்ளது . நேற்று தொடங்கிய முதல் ஆட்டம் ஐபிஎல் 16வது சீசனின் முதல் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

தொடக்கத்திலேயே இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் தங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்தினர். டுவைன் கான்வே 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதன் பிறகு மொயின் அலி 23 ரன்களில் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் 7 ரன்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் திரும்பினார். இருந்தாலும் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமான நின்று விளையாடினார்.
ருதுராஜின் வெறியாட்டம் :
சொல்லப்போனால் குஜராத் டைட்ன்ஸ் அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் ருதுராஜ் கெய்க்வாட். நிதானமாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 23 பந்துகளில் அரை சதத்தையும் பூர்த்தி செய்தார். அதனை தொடர்ந்து பெரிய ஷாட்களை ஆடிய அவர் 50 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களின் உதவியுடன் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தவிர, இறுதியில், எம்.எஸ். தோனி 7 பந்துகளில் 1 பவுண்டரி-1 சிக்ஸர் உதவியுடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓவர்களில் 178ரன்கள் எடுத்து.

179 ரன்கள் இலக்கை கொண்டு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியினர் தொடக்கத்திலேயே பெரிய ஷாட்களை ஆட தொடங்கினர். குறிப்பாக சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். ஆனால் அவரும் ருதுராஜ் கெய்க்வாட் பந்தை கைப்பற்றி அவுட் ஆக்கினார். எம்.எஸ் தோனி எப்போதும் போல கடைசி வரையில் ஆட்டத்தை எடுத்து செல்ல முயற்சி செய்தார். ஆனால் கடைசியில் வந்த ஆல்ரவுண்டர் ஆட்டக்காரர்கள் 4 மற்றும் 6களாக அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
தோனி சாதனை :
இப்படி முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தோல்விடைத்ததால் ரசிகர்கள் வருத்தமடைந்தாலும் மன்றோரு விஷியத்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் போது கடைசியாக வந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த போட்டியில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் சரித்திரம் படைத்தார், உலகின் முதல் வீரர் என்ற பெருமையை மஹி படைத்தார்.
😂Kar diya bhai! Check out Thala's 200th six for #CSK 💥#IPLonJioCinema #CSKvGT #TATAIPL https://t.co/eMKI8D3FXG pic.twitter.com/BeuUyBEBlf
— JioCinema (@JioCinema) March 31, 2023
ஐபிஎல் போட்டிகளில் எப்போதுமே தோனி 8 வது இடத்தில் இறங்கினார் அதிகபட்சமான ஆட்டமிழந்து பெவிலியன் திரும்புவார். ஆனால் நேற்று நடந்த போட்டியில் எம்எஸ் தோனி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 8வது இடத்தில் பேட்டிங் செய்து 14 ரன்களில் ஆட்டமிழக்காமல் விளையாடினார். எனவே முதல் போட்டியில் குஜராத் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றிருந்தாலும் தோனியின் இந்த சாதனையினால் ஆறுதல் அடித்துள்ளார் ரசிகர்கள்.




