நேற்று நடந்த ஐபிஎல் 2023தொடரின் குவாலிபைர் 1 போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றது. ஆனால் இந்த வெற்றி கிடைக்குமா? என்று தொடக்கத்தில் கேள்வி எழுந்தது. ஏனென்றால் ருதுராஜ் விக்கெட்டிற்கு பிறகு சென்னை அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் மளமள வென தங்களுடைய விக்கெட்டுகளை இழந்தனர்.

இருந்த போதிலும் மெதுவாக விளையாடிய சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் 172 ரன்களை எடுக்க முடிந்தது. இதற்கு பிறகு 173 ரன்கள் எடுத்தால் பெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியினர் தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருகட்டத்தில் குஜராத் வெற்றி பெற்றுவிடுமோ என்ற எண்ணம் சென்னை ரசிகர்களுக்கு தோன்றியது.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்கின் தொடக்கத்தில் முதல் விக்கெட் விழுந்த பிறகு போட்டி கைமீறி போகும் நிலையில் தான் இருந்தது. ஏனென்றால் குஜராத் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா மற்றும் அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் சுப்மன் கில் இருந்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியா 8(7) ரன்கள் எடுத்திருந்த நிலையில் தீக்சனாவிடம் ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் அவர் ஆட்டமிழனத்திற்கு தோனியும் ஒரு காரணம் எனக் கூறலாம்.
👀 Dhoni moved a fielder to the off-side a ball prior to Hardik getting dismissed! #GTvCSK #TATAIPL #Qualifier1 #IPLonJioCinema pic.twitter.com/oJow2Vp2rj
— JioCinema (@JioCinema) May 23, 2023
ஏனென்றால் ஹர்டிக் பாண்டியா 5வது ஓவரில் மூன்றாவது பந்தை கில் சிங் எடுத்து ஹர்திக் பந்தியாவிடம் ஸ்ட்ரைக்கை தர, பாண்டியா பந்தை கட் ஷாட் அடிக்க முயற்சி செய்தார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் எண்ணத்தை புரிந்து கொண்ட தோனி சென்னை அணியின் மிகசிறந்த பில்டர் ரவீந்திர ஜடேஜாவை பேக்வேர்ட் பாய்ண்டில் நிறுத்தினார்.
இந்நிலையில் ஐந்தாவது பந்து சரியாக வந்ததினால் பவுடரை அடிக்கும் போது அது தவறி நேராக பேக்வேர்ட் பாய்ண்டில் நின்ற ஜடேஜாவிடம் சென்றது. அதனை லாபகரமாக பிடித்தார் ஜடேஜா. ஹர்திக் பந்தியாவின் இந்த விக்கெட் சென்னை அணிக்கும் மிகவும் முக்கியமானது ஏனெற்றால் ஒருவேலை ஹர்திக் பாண்டியா செட்டில் ஆகியிருந்தால் கண்டிப்பாக 10,15 பந்துகளை பிறகு பெரிய ஷாட்டுகளை அடியிருப்பார்.

இதனால் இவர் ஆட்டமிழந்தாலும் பின்னர் வரும் பேட்ஸ்மேன்கள் சுலபமாக இலக்கை ஈட்டியிருக்க முடியும். எனவே ஹர்திக் பாண்டியாவின் இந்த விக்கெட் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதோடு அந்த விடியோவும் தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் நேற்று வெற்றி பெற்ற சென்னை அணி ஐபிஎல் சீசனில் 10 வது முறையாக பைனலுக்கு சென்று அசத்தியுள்ளது குறிப்பிடதக்கது.





