நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் மலை காரணமாக போட்டி கடுமையாக பாதிக்கப்பட்டது. இறுதியில் சென்னை அணி ஆடும் போது மழை காரணமாக DLS முறைபடி 15 ஓவர்களில் 171 ரன்கள் என்ற பெரிய இலக்கு சென்னை அணிக்கு எதிராக இருந்தது. இந்நிலையில் தொடக்க அடக்காரர்களான டேவின் காணவே மற்றும் ருதுராஜ் கெய்க்குவாட் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க சென்னை அணி பொறுமையாக முன்னேறியது.

மேலும் வீரர்கள் ஆட்டமிழந்தாலும் அவர்களது வேலையே சரியாக செய்து ரன்களை எடுத்துக்கொடுத்தனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய தோனி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அது ரசிகர்களுக்கு மட்டுமல்ல அவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதனையடுத்து தோனி தலையை குனிந்தவாறு பெவிலியன் திரும்பினார். இறுதியில் 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா பிரமாதமாக விளையாடி சென்னை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
அதன் போது ஜடேஜா மைதானம் முழுவதும் சுற்றி நேரடியாக தொனியிடம் செல்ல தோனி ஜடேஜாவை தூக்கி ஆனந்த கண்ணீர் வடித்தார். அந்த சம்பவம் கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இருந்து எப்போதுமே நீகிக்காது என்றே சொல்லலாம். இருந்த போதிலும் காலில் காயத்துடன் தோனி இந்த சீசன் முடியும்வரையில் விளையாடி கடைசி போட்டியில் அவுட்டானது அவருக்கும் வருத்தமாகத்தான் இருக்கும். இந்நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சென்னை அணியின் CEO தோனி ஆட்டமிழந்தது குறித்து பேசியுள்ளார்.

காசி விசுவநாதன் கூறியது :
அவர் கூறுகையில் “ராயுடு எங்களை 14 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்படும் நிலைக்கு கொண்டு வந்தார். அதன் போது எம்எஸ் தோனி தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் மோசமாக உணர்ந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அவருடைய திறமைக்கு தன்னுடைய பாணியில் போட்டியை முடித்திருப்பார். ஆனால் அந்த நேரத்தில் ஆட்டமிழனத்தால் என்னால் என் பொறுப்பை நிறைவேற்ற முடியவில்லை என்று அவர் நினைத்திருக்கலாம்.
இவ்வளவு நெருங்கி வந்து தோற்றால் எப்படி என்று அவர் உணர்ந்திருக்கலாம். ஆனாலும் ஜடேஜா இன்னும் ஆட்டமிழக்காமல் அங்கு இருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். இறுதி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது அது கடினமான ஒன்றுதான். ஆனால் ஜடேஜா தான் எப்போதும் ஆடுவது போல முரட்டுத்தனமாக விளையாடி சிக்ஸரை அடித்தார். மேலும் ஒரு பந்துவீச்சாளராக கடைசி பந்துகளை வீசுவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.

அந்த விஷியமம் தோனி இறுதியில் உணர்ச்சிவசப்பட்டதற்கு காரணம் என்றார் காசி விஸ்வநாதன். மேலும் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவது குறித்து பேசிய அவர் “அவர் விளையாடுவது கடினமான ஒன்றுதான். ஆனால் அவர் தான் வெளியேறுகிறேன் என்றால் வெளிப்படையாக கூறி விடுவார். அவருடைய கேப்டன்சியும், விளையாட்டும் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்று அவருக்கு தெரியும். அந்த விஷியத்தை நாம் அனைத்துவரும் பாராட்ட வேண்டும் என்றார் சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன்.





