ஐபிஎல் 2023 தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்னமும் 4 போட்டிகள் மட்டுமே மீதம் இருக்கிறது. அதில் ஒரு முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத்தை டைட்டஸ் அணிகள் மோதுகின்றனர். இதில் எந்த அணி வெற்றியடைகிறதோ அது நேரடியாக பைனல் போட்டிக்கு செல்லவும். மறுபுறம் தோல்விடைந்த அணி இரண்டாவது வாய்ப்பாக எலிமினேட்டர் தொடரில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும்.

அப்படி அந்த போட்டியில் வெற்றி பெற்ற அணி பைனலுக்கு செல்லவும். இந்நிலையில் இன்று மற்றும் நாளை குவாலிபயர் 1 மற்றும் எலிமினிடோர் போட்டிகள் நடைபெற இருக்கிறது. எனவே இந்த போட்டிகளை எதிர்கொள்ள மும்பை, குஜராத், லக்னோ, சென்னை உள்ளிட்ட மூன்று அணிகளும் கடுமையாக பயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆனால் அந்த வீடியோவில் தோனி தன்னுடைய முழங்காலில் பேண்ட்டேஜ் அணிந்தவாறு பயிற்சி செய்கிறார். சமீப காலமாகவே தோனியின் முழங்களில் காயம் ஏற்பட்டு தோனி அவதிப்பட்டு வருகிறார் என்றார் தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகிறது. அதற்கு சென்னை அணியின் தரப்பில் இருந்து தோனி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கூறப்பட்டது. போட்டியின் போது கூட தோனி தடுமாறுவதை பார்க்க முடிந்தது.
MS Dhoni in the practice session. pic.twitter.com/6tetGV5TFQ
— Johns. (@CricCrazyJohns) May 22, 2023
மேலும் இந்த ஐபிஎல் போட்டியின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக ஆடிய போது தோனி காலில் ஐஸ்பேக் அணிந்து கொண்டு விளையாட வந்தார். அந்த வீடியோ அப்போது வைரலாகிய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் தோனி காலில் கட்டுடன் பயிற்சி செய்யும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சென்னை அணியின் சாதனை :
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை பொறுத்த வரையில் இதுவரையில் 15 சீசன்கள் முடிந்து தற்போது 16வது சீசன் நடந்து வருகிறது. இதில் சென்னை அணி 14 போட்டிகளில் ஆடி 11 பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதோடு ஐபிஎல் போட்டியில் அதிக முறை பிளேஆஃப் சுற்றுக்கு சென்ற அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது. இவை மட்டுமின்றி இறுதிப் போட்டியைப் பற்றி பேசினால், சென்னை 9 முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது, அதில் 4 முறை கோப்பை வென்றுள்ளது குறிப்பிடதக்கது.




