ஐபிஎல் 2023 தொடரில் 61 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற சேனனி அணி பேட்டிங் செய்யும் தேர்வு செய்தது. தலில் களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் யாரும் பெரிதாக ஆடாத நிலையில் சிவா துபே மட்டும் தனி ஆளாக விளையாடி 34 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். இருந்த போதிலும் சென்னை அணி இறுதியில் 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதற்க்கு பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் இருவரும் சிறப்பாக விளையாடினர். ரிங்கு 43 பந்துகளில் 54 ரங்களையும், கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா 44 பந்துகளில் 57 ரங்களையும் அடித்து கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய தோனி தோல்விக்கான காரணம் குறித்து பேசினார்.
எம்எஸ் தோனி பேசுகையில் “இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் முதல் பந்தை வீசிய நிமிடத்தில், நாங்கள் 180 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரிந்தது. ஆனால் ஆடுகளத்தில் எங்களால் 180 ரன்கள் எடுக்க முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் பனி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். எங்கள் பந்துவீச்சாளர்கள் யாரையும் நாங்கள் உண்மையில் குறை சொல்ல முடியாது. சூழ்நிலைகள் தான் இந்த விளையாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “சிவம் துபே சிறப்பாக விளையாடினார். இந்த போட்டியில் அவர் செய்ய வேண்டிய வேலையை சரியாக எங்களுக்கு செய்து கொடுத்தார். இதனை போலவே தொடர்ந்து அவர் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார். மேலும் தீபக் சாஹர் பற்றி பேசுகையில் “அவர் பந்தை ஸ்விங் செய்கிறார் எந்த பகுதியில் வீச என்பதை அறிந்து அதற்கேற்ப பந்துவீசுகிறார்.
ஏனென்றால் பாதுகாக்க குறைவான ரன்களே இருக்கும் போது நீங்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும். உங்களுக்கு தீபக் சாஹர் வீசும் பந்து ஸ்விங் ஆகவில்லை என்று தெரிந்தால் கண்டிப்பாக அது யாருக்கும் ஸ்விங் ஆகாது என்றார் மஹேந்திர சிங் தோனி.

புள்ளி பட்டியல் :
புள்ளி பட்டியலை பொறுத்தவரையில் சென்னை அணி 13 போட்டிகள் விளையாடி அதில் 7 போட்டிங்களில் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. கொல்காத்தா அணியை பொறுத்தவரையில் 12 புள்ளிகளுடன்7வது இடத்தில் இருக்கிறது. மேலும் சென்னை அணி அடுத்ததாக டெல்லி கேபிடல்ஸ் அணியை வரும் 20ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.





