இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகிவிட்டாலும் இன்றும் அவரது புகழ் குறையவில்லை அதற்கு முழு காரணம் அவரையே சேரும். உதாரணமாக இந்திய அணிக்காக விளையாடும் போது கேப்டனாகவும், வீரராகவும் தோனி பெரிய சாதனைகளை படைத்துள்ளார். அவரது தலைமையில் இந்தியா இரண்டு முறை உலகக் கோப்பையையும் வென்றுள்ளது.

சென்னை ரசிகர்களை பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொன்னால் போதும் முதலில் நியாபகம் வருவது தல எம்.எஸ்.தோனி என்ற பெயர் தான், அந்த அளவிற்கு எம்.எஸ்.தோனிக்கும் சென்னை மண்ணிற்கும் உள்ள ஒரு பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது.

தமிழ் நாட்டு மக்கள் பல வட இந்தியர்களை வெறுத்தாலும் அனைவராலும் வெறுக்கப்படாத ஒரு வட இந்தியர் யார் என்றால் அது எம்.எஸ்.தோனி தான். அந்த அளவிற்கு சென்னை முழுவதும் ‘தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் தோனியின் இரண்டாவது சொந்த ஊர் சென்னை என்றே சொல்லலாம்.

ஐபிஎல் தொடங்கி காலத்திலிருந்து இன்று வரையில் அதிகமுறை ஒரே அணிக்கு கேப்டனாக இருந்த ஒரே வீரர் அது எம்.எஸ்.தோனி தான். அதோடு இவரது தலைமையில் சென்னை அணி நான்கு முறை ஐபிஎல் படங்களை வென்றிருக்கிறது. ஐந்து முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் தோனியை ரசிகர்கள் சாதாரண உடையில் பரத்தை விட கிரிக்கெட் உடையிலேயே அதிகமுறை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கு முக்கியமான காரணம் அவர் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

சொல்லப்போனால் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை சாம்பியன் போட்டியின் போது தோனிக்கு மகள் பிறந்தார். ஆனால் தனக்கு நாட்டின் கடமை தான் முக்கியம் என்று இந்தியா வராமல் இருந்தார். ஆனால் 2015 உலகக்கோப்பையின் போது இந்திய பைனல் செல்லும் வாய்ப்பை 95 ரன்களில் தவறவிட்டது. ஆனாலும் அந்த போட்டியில் தோனி தான் அதிக ரன்களை எடுத்தது குறிப்பிடதக்கது.

இப்படிப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரரின் வரலாற்றை நாம் தற்போது அறிந்திருந்தாலும் அவரின் கடந்த காலம் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. அப்படிப்பட்ட நிலையில் தான் தோனியின் யாரும் பார்த்திடாத புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதோடு இன்று ஐபிஎல் 2023 தொடரின் குவாலிபைர் 1 ல் குஜராத்திற்கு எதிராக களமிறங்குகிறது. இந்த போட்டியில் மட்டும் சென்னை வெற்றி பெற்றால் நேரடியாக பைனல் போட்டிக்கு செல்லவும் என்பதினால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.





