இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 45வது போட்டி நேற்று லக்னோ மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்றது, ஆனால் மழை காரணமாக அந்த போட்டி நிறைவு பெறவில்லை. இந்நிலையில் நேற்று நடந்த இப்போட்டியில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தார். பதிலுக்கு முதலில் பேட் செய்த லக்னோ அணி 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. ஆனால் அப்போது மழை பெய்ததால் போட்டியை நிறுத்த வேண்டியதாயிற்று.

இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்த்தால் நேற்றைய ஆட்டம் மழையால் நிறைவடையவில்லை. இந்நிலையில் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியுடன் திருப்தி அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. புள்ளிகள் கிடைத்த போதிலும் நேற்றைய போட்டியில் தோனியின் பேட்டிங்கைப் பார்க்காததால் சென்னை ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர். சொல்லப்போனால் லக்னோவ் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் நிறைந்திருந்தது.
இந்நிலையில் போட்டி நிறுத்தப்பட போதிலும் நேற்று தோனி லக்னோ இன்னிங்ஸின் போது ஒரு போஸ் கொடுத்தார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது சென்னை vs லக்னோ அணிகளுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்கில் 6வது பந்தை வீச வந்தார் மகேஷ் திக்ஷனா. அப்போது அவர் போட்ட மூன்றாவது பந்தை வீசும் போது மனன் வோஹ்ரா பேட்டிங்கில் இருந்தார்.
— Billu Pinki (@BilluPinkiSabu) May 3, 2023
அப்போது பந்து பேடில் பட்டு சென்றது போல தெரிந்ததால் மகேஷ் திக்ஷனா LBWவிற்கு தோனியிடம் முறையிட்டார். ஆனால் தோனி சரியாக தெரியவில்லை என்பதை சொல்லும் போது wwe சூப்பர் ஸ்டார் John Cenaவை போல சைகை காட்டினார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து வீசிய இரண்டு பந்துகளிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் மகேஷ் திக்ஷனா.

ஜான் சீன பற்றிய தகவல் :
WWE ஜான் சீனாவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக இந்தியாவில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்க்காக முக்கியமான காரணம் அவருடைய அந்த ஸ்டேயில் தான். அதுவும் அவர் “U can’t see me” மூவ் உலகம் முழுவதும் பிரஸ்தி பெற்றது. அப்படியொரு நிலையில் தான் தோனி ஜான் சீனாவை போல சைகை காட்டியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
புள்ளி பட்டியல் :
ஐபிஎல் 2023ல் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகளைப் பார்த்தால், ஐபிஎல்லில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 5 ஆட்டங்களில் வெற்றியும் 4 ஆட்டங்களில் தோல்வியையும் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் மழை பெய்ததன் காரணமாக சிஎஸ்கேவிற்கு 1 புள்ளி மட்டுமே கிடைத்து ஐபிஎல் 2023 இன் புள்ளிப்பட்டியலில் சென்னை 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.





