ஐபிஎல் 2023ன் 22 வது லீக் இன்று இரண்டு சாம்பியன் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. லீக் தொடரின் 22வது ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்தது. இதனால் இந்த போட்டியில் மும்பை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு கொஞ்சம் அதிகரித்துள்ளது.

ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் தற்போது பேட்டிங்கை விட பந்துவீச்சில் நன்றாக செயல்படுகிறார்கள் எனவே இந்த முறையும் அதிக விக்கெட்டுகளை எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணியினர் முயற்சி செய்வார்கள். அதே போலதான் தொடக்க பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்தார்கள் மும்பை இந்தியன்ஸ் அணி. பின்னர் 8.1 ஓவரின் போது கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா ஆட்டமிழந்தார். அனால் வெங்கடேஷ் ஐயர் பொறுமையாக ஆடி 30 பந்துகளில் 64 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் தான் இன்று வான்கடே மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக நடக்கும் போட்டியில் மும்பை இந்தியசின் வீரர்கள் தங்களுடைய ஜெர்சியை மாற்றி களமிறங்கியுள்னர். இதற்க்கு காரணம் மும்பை அணியின் உரிமையாளர் நீட்டா அம்பானியின் அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு ஏன்ற ESA அமைப்பின் முன்னெடுப்பதற்காக WPL தொடரின் வீராங்கணைகள் அணிந்த வண்ண செற்சியுடன் களமிறங்கி இருக்கின்றனர்.

இந்த செயலின் மூலம் விளையாட்டுகளில் பெண்களின் பங்களிப்பபு மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் முன்னெடுத்து வைக்கிறது. இவை மட்டுமின்று 19ஆயிரம் பெண்களும் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் வான்கடே மைதானத்திற்கு வந்துள்ளனர். இவர்களோடு மும்பை மகளீர் அணியின் கேப்டன், வீராங்கனைகள் மற்றும் பயிர்த்தியாளர் உள்ளிட்டோரும் இந்த போட்டியை கான வந்துள்ளனர்.

சொல்லப்போனால் ஆர்சிபி அணி வருடாவருடம் “கோ கிரீன்” என்று பசுமை மற்றும் தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படும் வகையில் பச்சை நிறத்தில் உள்ள செற்சியை அணிவார்கள். அப்படியொரு நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெண்களின் விளையாட்டை முக்கியத்துவம் கொடுக்கவும் வகையில் செய்துள்ள செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.





