உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி முடிவடைந்த அடுத்தாக இந்திய அணி வெஸ்ட் இண்டீன் அணியுடன் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. ஆனால் கடந்த WTC போட்டியில் இந்திய அணியன் வீரர்கள் பலர் மோசமாக விளையாடியதினால் அவர்களில் பலர் இந்த போட்டியில் இடம்பெறவில்லை. குறிப்பாக புஜாரா, ஷமி போன்றவர்கள் வெஸ்ட் இண்டீன்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இல்லை.

அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை இந்த தொடருக்கு தேர்வு செய்துள்ளது இந்திய அணி. அவர்களில் ஒருவர்தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவரை பற்றி சொல்லித்தான் தெரியவேண்டும் என்று இல்லை நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் உள்ளூர் தொடர்களிலும் அதிரடியாக ஆடி கவனத்தை பெற்றார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனையும் படித்தார். அப்படிப்பட்ட நிலையில் தான் வரும் IND vs Wi டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட இருக்கிறார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி :
இது குறித்து சமீபத்தில் அவர் கொடுத்திருந்த பெட்டியில் கூறுகையில் “21 வருடம் நான் கடவு கண்டது இதற்கு மட்டும்தான், ஒவொவொரு இரவிலும் நான் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து சதம் விளாசி ரசிகர்களின் முன்னர் கொண்டாடுவது போல கனவு கண்டிருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை விடவும் அதிகமாக ஆனான் நேசிப்பது கிரிக்கெட்டை தான், அதற்க்காக நான் என்ன வேண்டமானாலும் செய்வேன்.

வீரர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நான் உடை 13 பந்துகளில் அரை சதம் அடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை, எனவே ஒரு விஷியத்தை சாதிக்காக வேண்டும் என்றால் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும், கிரிக்கெட்டில் கற்றுக்கொள்ள பல இருக்கிறது அவற்றை கண்டிப்பாக நான் கற்றுக்கொண்டு என்னுடைய அணியை வெற்றிபெற செய்வேன் என்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
ரோஹித், விராட், ரஹானே குறித்து :
மேலும் ரோஹித், ரஹானே, விராட் கோலி போன்ற பெரிய வீரர்கள் எனக்கு பல அறிவுரைகளை கூறினார்கள். நான் எப்படி என்னுடைய விளையாட்டை மேலும் மேம்படுத்துவது, அதிலிருந்து எப்படியா கற்றுக்கொள்வது என்பதை பற்றியும் அறிவுரைகளை எனக்கு அவர்கள் வழங்கினார்கள். ஆனால் முடிவில் மைதானத்தில் சிறப்பாக செயல்படுவது என்னுடைய கையில் தான் இருக்கிறது. கற்றுக்கொள்ள பல இருக்கின்றன, கண்டிப்பாக அதனை நான் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்வேன் என்று நினைக்கிறன் என்றார் ஜெய்ஸ்வால்.

மேலும் பேசிய அவர் “விளையாட்டு என்பது அனைத்தும் நம்முடைய மனஉறுதியை பொறுத்தது என்று கோலி, ரஹானே, ரோஹித் மூவரும் கூறினார்கள். சில கடினமான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொண்டு அதற்கு தகுந்தாற் போல நம்மை தகவமைத்து அணியை வெற்றி பெற செய்வதில் தான் இருக்கிறது. என்னுடைய எண்ணம் எப்போதும் அணி வெற்றியடைய நான் என்ன செய்யவேண்டும் என்பதுதான் என்று தெரிவித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.





