ஐபிஎல் 2023 தொடரில் பலவிதமான சம்பவங்களை நடந்து விட்டது. கடைசி ஓவரில் 5 சிக்ஸர், கடைசி ஓவரில் 4 விக்கெட் என பலவிதமான நிகழ்வுகளை பார்த்த ரசிகர்கள் சில தேவையில்லாத விஷியங்களையும் பார்த்தனர். குறிப்பாக விராட் கோலி vs நவீன் வாக்குவாதம் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கி இன்று வரையில் நீடித்து வருகிறது. இந்த பிரச்னை LSG VS RCB போட்டியின் போது நடந்தது.

பின்னர் அந்த வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு நிபந்தனை கொடுத்தது ஐபிஎல் நிர்வாகம். இருந்த போதிலும் நவீன் உல் ஹக். விராட் கோலியை மறைமுகமாக கிண்டல் செய்வது போன்ற இடுகைகளை விட்டுவந்த நிலையில் ரசிகர்களும் நவீன் விளையாடும் போதெல்லாம் கோலி கோலி என்று கோஷமிட்டு வைரலாக்கி வந்தவர். அப்படிப்பட்ட நிலையில் தான் நேற்று நடந்த போட்டியில் நவீன் உல் ஹக் மைதானத்தில் இருந்த போது கோலி கோலி என கோஷமிட்டனர்.
நவீன் உல் ஹக் கோலி பற்றி கூறியது :
இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் ஏசியா நவீன் கூறுகையில் “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் மைதானத்தில் உள்ள ரசிர்கள் அனைவரும் விராட் கோலியின் பெயரை கோஷமிடுவது அல்லது வேறு எந்த வீரரின் பெயரையாவது கோஷமிடுவது நான் விரும்புகிறேன். அது என்னை போட்டியில் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எண்ணத்தை தூண்டுகிறது.

நான் வெளியில் நடப்பதை பற்றியோ அல்லது வெளியில் வரும் சப்தம் பற்றியோ யோசிப்பதில்லை. நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலும் செயல்பாட்டிலும் மட்டுமே கவனத்தை செலுத்துகிறேன். கூட்டம் கூட்டமாக கோஷமிடுவது அல்லது யாரேனும் ஏதாவது சொல்வது போன்றவை எனக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஒரு தொழில்முறை விளையாட்டு வீரனாக நான் என்னுடைய முன்னேற்றத்தில் மட்டுமே கவனத்தை செலுத்தியிருக்கிறேன்.

பொதுவாக உங்களுடைய அணிக்கு நீங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றார். ரசிகர்களை உங்களை விமரிசிப்பார்கள். அதே உங்களுடைய அணிக்கு நீங்கள் சிறப்பாக செயல்படும் போது ரசிகர்கள் உங்களுடைய பெயரை சொல்லி கோஷமிடுவார்கள். அடிப்படையில் இது விளையாட்டின் ஒரு பகுதியாகும் என்று கூறினார் நவீன் உல் ஹக்.
கம்பீர் பற்றி :
மேலும் கம்பீர் பற்றி பேசிய நவீன் கூறுகையில் “கம்பீர் இந்தியாவின் ஒரு ஜாம்பவான். அவருக்கு இந்தியாவில் பெரிய மரியாதை உள்ளது. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் நிறைய போட்டிகளில் விளையாடியிருக்கிறார். ஒரு வழிகாட்டியாக, பயிற்சியாளராக, கிரிக்கெட்டின் ஜாம்பவானாக அவரை நான் மிகவும் மதிக்கிறேன். மைதானத்திற்கு உள்ளும், வெளியும் எப்படி செயல்பட வேண்டும் என்று அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என்றார் நவீன்.




