இந்தியன் பிரீமியர் லீக்கின் 43வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேநேரம், இந்த போட்டி முடிந்ததும் ஆர்சிபியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் இளம் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.

அதன் பிறகு இந்த விஷயம் பெரிதாகி கோஹ்லிக்கும், லக்னோ அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது பெரிய சண்டையாகவே வெடித்து.அதே நேரத்தில் இந்த நிகழ்வினால் பிசிசிஐ விராட் கோலிக்கு சம்பளத்தில் இருந்து 100 சதவீதம் பிடிக்கப்பட்டது. இவரை போன்றே கவுதம் கம்பீருக்கு 100 சதவிகிதமும், லக்னோ வீரர் நவீன் ஹல் ஹகிற்கு 50 சதவிகிதமும் தண்டனையாக பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் போட்டி முடிந்ததும் லக்னோ வீரர் நவீன் ஹல் ஹக் இந்த சண்டை குறித்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு, “உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே ஆகும். அதுதான் வழக்கம், அப்படித்தான் நடக்கும் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நவீன் போட்டிருந்த அந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக வைரலாகி வருகிறது.
Fines for breaching the IPL Code Of Conduct yesterday:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 2, 2023
Virat Kohli – 1.07cr (100%).
Gautam Gambhir – 25 Lakhs (100%).
Naveen Ul Haq – 1.79 Lakhs (50%). pic.twitter.com/LTLwz0jF4K
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் ஆப்கானிஸ்தான் அணி வீரர் நவீன் உல் ஹக். திங்கள்கிழமை ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் நவீன் பேட்டிங் செய்தபோது நவீனுக்கும் கோஹ்லிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதன்பிறகு போட்டி முடிந்ததும் இந்த இரு வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது தொடர்பான பல வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
Naveen Ul Haq's latest Instagram story. pic.twitter.com/YWJBK6Hm9R
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 2, 2023
லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லக்னோவுக்கு 127 ரன்கள் இலக்காக ஆர்சிபி வைக்க. லக்னோ அணியால் 108 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் இந்த போட்டியில் வெற்றி, தோல்வியை விட இரு அணிகளுக்கு இடையேயான சண்டை குறித்த விவாதம் தான் அதிகமாக பேசப்படுகிறித்து. இந்த சண்டை தொடங்கிய முதலில் களத்தில் தான் அப்போது விராட் கோலிக்கும் நவீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
No wonder no one likes him and his attitude in the current Indian team… Shame on #ViratKohli for being a senior player and
— Amitabh Chaudhary (@MithilaWaala) May 1, 2023
Fighting with a youngster.
He truly deserve what BCCI did to him 👍🏻 pic.twitter.com/JHLwAev3IA
அந்த சம்பவத்திற்கு பிறகு போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் கைகுலுக்கியபோது, நவீன் கோஹ்லியின் கையைப் பிடித்தார். அதன் பிறகு இந்த விஷயம் மேலும் அதிகரித்தது. மேலும் கவுதம் கம்பீர் டக் அவுட்டில் கைகுலுக்க வந்தபோது விராட் கோஹ்லி மற்றும் கௌதம் கம்பீர் விவகாரம் அதிகரித்தது. அது தொடர்பான வீடியோ வைரலாக நிலையில் ரசிகர்கள் இருவருக்கும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.





