நேற்று நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதல் இன்னிங்கில் 200 எடுத்த நிலயில் குஜராத் அணி சிறப்பாக பேட்டிங் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சொந்த மைதானத்தில் தோற்கடித்தது. அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மேலும் தொடந்து இரண்டாவது தோல்வியை தழுவிய சென்னை தற்போது புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி தோற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் துஷார் தேஷ்பாண்டே. இவர் அந்த போட்டியில் 4 ஓவர்களில் மட்டுமே 49 ரன்களை வாரி வழங்கினார். போட்டியின் முக்கியமான கட்டத்தின் போது 16வது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு 4 என 24 ரன்களை கொடுத்தார். அது தான் சென்னை அணியின் தோல்விக்கு மிகப்பெரிய திரும்புமுனையாக இருந்தது.
தோல்விக்கான காரணம் :
அதற்கு பிறகு 19 வது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே முதல் பந்தில் 4 ரன்களை விட்டாலும் அதற்கு அடுத்த பந்தில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஜிதேஷ் சர்மாவை அவுட்டாக்கினார். அனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு பவுண்டரியை கொடுத்தார் இதனால் கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டும் தான் தேவைப்பட்டது. ஆனாலும் 20 ஓவரை போட வந்த பதிரனா சிறப்பாக பந்துவீச்சு கட்சி பந்துவரையில் எடுத்துச்சென்றார், அந்த விஷியத்தை பதிரினாவை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஆனாலும் சென்னை அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய துஷார் :
இந்த போட்டியில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும் ரன்களை வாரி வளங்கியதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் அந்த ரன்கள் தான் சென்னை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் என்பதையும் மறுக்க முடியாது. தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசும் தீபக் சஹர் காயம் காரணமாக வெளியேற இம்பேக்ட் பிளேயர் ரூலை பயன் படுத்தி துஷார் தேஷ்பாண்டே உள்ளே வந்தார். ஆனாலும் இதுவரையில் அவரது பந்துவீச்சு டெத் ஓவர்களில் சொல்லும்படியாக இல்லை.
Tushar Deshpande: Purple cap aur Orange cap dono ke liye contribute karne ka ghamand hai pic.twitter.com/Uk5QeoO0QK
— Rajabets India🇮🇳👑 (@smileandraja) April 30, 2023
கோபமான ரசிகர்கள் :
அப்படியொரு நிலையில் தான் இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் தேஷ்பாண்டேவிற்கு ஊதா நிற தொப்பி வழங்கப்பட்டது. இதனால் கோபமடைந்த ரசிகரகள் இவர் ஊதா நிற தொப்பிக்கு மட்டுமல்ல ஆரஞ்சு நிற தொப்பிக்கும் தகுதியானவர் என்று சோசியல் மீடியாக்களில் கலாய்த்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சென்னை அணி தோல்வியுற்ற 4 போட்டிகளிலும் தோல்விக்கு முக்கியமான காரணம் இவர்தான் என்று விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Tushar Deshpande wins purple cap even after his contribution made csk to lose the game#CSKvPBKS pic.twitter.com/UGRqyjwjUp
— 👑Che_ಕೃಷ್ಣ🇮🇳💛❤️ (@ChekrishnaCk) April 30, 2023
Not worth ra #Tushardeshpande 😑 pic.twitter.com/GxY6LbVv3E
— Íñtróvért:)Guy™ (@ChaithuGuy) April 30, 2023
மேலும் ஐபிஎல் போட்டிங்களில் ஊதா நிற தொப்பி போட்டியில் இருக்கும் ரவிச்சந்திர அஸ்வின், அரஷ்தீப் சிங், ரஷித் கான், முகமத் சிராஜ் போன்றவர்கள் 9 எக்கனாமிக் வைத்திருக்கும் நிலையில் துஷார் தேஷ்பாண்டே மட்டும் 11.07 என அதிகப்படியான எக்கனாமியுடன் இருந்து ஊதா தொப்பியை வாங்கியிருப்பதினால், இவர் ஊதா தொப்பிக்கு தகுதியில்லாதவர் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்





