KKR கேப்டன் ராணா முன்னாள் இந்திய அணி கேப்டன் தோணி மற்றும் ரோஹித் சர்மாவை பற்றி கூறியுள்ளது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிக்கும் ஐபிஎல் 16 சீசனுக்கான முதல் போட்டி இன்னும் சில மணிநேரங்களில் துவங்க இருக்கிறது. சமீபத்தில் தான் ஐபிஎல் 16 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது அதன் படி இன்று தொடங்கி வரும் மே மாதம் 28ஆம் தேதி ஐபிஎல் 16 முடிவடைகிறது. அதோடு இந்த சீசனில் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் சீசனில் மிக முக்கியமான அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழக்கமான கேப்டனாக இருந்து வந்தவர் ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீப காலமாக நன்றாக விளையாடி விராட் கோலியை போல உச்சம் தொடுவார் என்றிருந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து பல காயங்கள் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
நிதிஷ் ராணா:
இப்படியொரு நிலையில் தான் ஐபிஎல் 2023ல் கேகேஆர் அணி கேப்டனாக நிதிஷ் ரானாவை அறிவித்துள்ளது. நீண்ட நாட்களாக காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார். அப்படிப்பட்ட நிலையில், அவர் இல்லாத நிலையில், கேப்டன் பொறுப்பை நிதிஷ் ராணாவிடம் அணி நிர்வாகம் வழங்கியுள்ளது. ஆனால் கேப்டனாக பதவியேற்ற பிறகு, ரோஹித் சர்மாவையும் தோனியையும் நான் பின்தொடரவில்லை என்று கூறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோனி, ரோஹித்தை பின்பற்ற மாட்டேன் :
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்திற்கு டீம் சவுதி, ஷாகிப் அல் ஹசன் போன்ற அனுபவமிக்க வீரர்களை கேப்டனாக நியமிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் இளம் வீரர் நிதிஷ் ராணா மீது நம்பிக்கை வைத்து அவருக்கு அணியின் கேப்டன் பதவியை கொடுத்துள்ளனர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகம். இந்நிலையில் கேப்டனாக பதவியேற்ற பிறகு, செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிதிஷ் ராணா ரோஹித் சர்மா, விராட் கோலி, மகேந்திர சிங் தோனி தொடர்பான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நிதிஷ் ராணா “நான் தோனி, ரோஹித் அல்லது கோஹ்லியை பின்பற்றவில்லை, அதனை நான் விரும்பவும் இல்லை. நான் என்னுடைய வழியில் விளையாடுகிறேன். நான் ஒருவரி பின்பற்ற தொடங்கினால் என்னுடைய தனித்தன்மையை நான் இழந்து விடுவேன். நான் என்னுடைய வழியில் அணியை நிவாக்கிக்க விரும்புகிறேன். நான் கம்பீர், ஈயின் மோர்கன், DK, ஷ்ரேயாஸ் ஐயர் என்ற சிறந்த வீரர்களின் தலைமையில் விளையாடினேன். ஆனால் நான் சௌரவ் கங்குலி அவர்களின் தலைமையில் மட்டும் விளையாட வில்லை.

பொறுத்திருந்து பாருங்கள் :
கற்க வேண்டியது அதிகமாக இருக்கிறது. எனக்கென தனி வழி இருக்கிறது. கொஞ்ச காலம் பொறுத்திருங்கள், நடக்க போவது உங்களுக்கே தெரியும் என்றால். இவரது பேச்சு தோனி மற்றும் ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தினாலும் இவர் முன்னதாக விஜய் ஹசாரே டிராபியில் டெல்லி அணிக்கு நிதிஷ் ராணா கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையில் சிறப்பு எதுவும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், ராணா தலைமையில் கேகேஆர் அணி இருக்கும் நிலையில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் ரசிகர்கள்.





