ஐபிஎல் தொடரின் 22வது ஆட்டத்தில் இன்று நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. மும்பையின் சொந்த மைத்தனமான வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், நிதிஷ் ராணா தலைமையிலான அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில், டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ஆரம்பதிலையே சொதப்பி வந்தனர் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த வெங்கடேஷ் ஐயர் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார்.
இதன் போது, அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களையும் அடித்தார். அதோடு 15 இறுதியில், ஆண்ட்ரே ரசல் இன்னிங்ஸ் 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 185க்கு கொண்டு சென்றார். அதோடு கொல்கத்தா அணியில் 15 வருடங்களுக்கு பிறகு சதம் அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார் வெங்கடேஷ் ஐயர்
— Out Of Context Cricket (@GemsOfCricket) April 16, 2023
ஆனால் 100 அடித்த வெங்கட்ஷ் ஐயருக்கு பதிலாக நிதிஷ் ராணா தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார். ஏனென்றால் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது நிதிஷ் ராணா றன் எடுக்க முடியாமல் திணறி கொண்டிருந்தார். அப்போது 8 ஓவரில் களமிறங்கிய இளம் சுழல் பந்து வீச்சாளர் ஹிருத்திக் ஷோகின் வீசிய முதல் பந்திலேயே ராமந்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
Here Is The Lafda 😂🤣#MIvsKKR #NitishRana #Hrithikshokeen pic.twitter.com/cmm7t4rPyR
— The ♠️ PROFESSOR (@TheRaghavvvv) April 16, 2023
ராணா செல்லும் போது போது ஷோக்கீன் அவரிடம் ஏதோ கூறினார், இதனால் அவர் கோபத்தில் கடுப்பான ராணா பந்து வீச்சாளரைத் தவறாகப் பேசியவாறு கூறப்படுகிறது. ஆனால் பிரச்சனை பெரிதாக ஆகாமல் SKY மற்றும் பியூஸ் சாவுலா உள்ளிட்டோர் வந்து வாங்குவாத்தை விலக்கி விட்டார்கள். இந்த சம்பவத்தின் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் அல்லது பிசிசிஐ இருவரின் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.





