ஐபிஎல2023 தொடரானது முடிவடைந்த நிலையில் தற்போது இந்த ரசிகர்களின் மொத கவனமும் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப்பிங் மீது இருக்கிறது. இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து விளையாடி கொண்டிருக்கும் இந்திய வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதவாது கடந்த சில மாதங்களாகேவே இந்திய அணிக்கும் வீரர்களுக்கு தொடந்து போட்டிகள் இருந்து கொண்டே இருந்து. இதனால் சுழற்சி முறையில் வீரர்களுக்கு போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. கடந்த டி20 உலககோப்பிக்கு பிறகு நவம்பர் மதம் நியூஸிலாந்து சுற்றுப்பயணம். பங்களாதேஷுக்கு எதிரான போட்டி, ஜனவரி மாதத்தில் இலங்கை மற்றும் நியூஸிலாந்திற்கு எதிரான போட்டி, பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி.
அதுமட்டுமல்லாமல் கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் 2023 சீசன் என இடைவிடாது விளையாடிய இந்திய அணியின் வீரர்கள் பலர் தற்போது 2023 உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாட இங்கிலாந்திற்கு சென்றிருக்கிறது. எங்கே ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் வரும் 7ஆம் தேதி முத்ல் 11 ஆம் தேதி வரையில் போட்டியிடுகின்றனர். இதனால் தொடர்ந்து கந்த 6 மாதங்களுக்கு விளையாடிய இந்திய அணிக்கு தற்போது ஒரு தான் ஓய்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணி ஆப்கானிஸ்தானுடைய ஒருநாள் போட்டிகள் விளையாடுவதற்காக திட்டம் தீட்டி கொண்டிருந்தது. ஆனால் தற்போது அந்த போட்டியை தள்ளி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய அணிக்கு உந்த உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிக்கு பிறகு வரும் ஜூன் 12 முதல் ஜூலை 11 வரையில் எந்த போட்டிகளும் இருக்காது. இதன் மூலம் இந்திய வீரர்கள் ஒரு மாதம் ஓய்வு எடுத்து கொள்ளலாம்.
மேலும் அதற்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இன்டியன்ஸ் அணியுடன் வரும் ஜூலை மாதம் மோத இருக்கிறது. மேலும் அதனை தொடர்ந்து வரும் 50 ஓவர் உலக கோப்பையிலும் இந்த அணியானது விளையாட இருக்கிறது இதனாலும் கண்டிப்பாக அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ஆனாலும் இந்திய அணி தொடர்ந்து உலகக்கோப்பை வரும் ஜூலை மாதத்தில் இருந்து விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.




