
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 34வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது.லக்னோ அணி இதற்க்கு முன்னதாக ராஜஸ்தான் அணியிடம் ஒரு தோல்வியை தழுவி இருந்தது. மற்று ஒரு பக்கம் சென்னை அணி மும்பை அணியிடம் வெற்றி பெற்று இந்த போட்டியில் மோதியது.

இதில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விளையாடி வந்தது. ஆரம்பத்தில் லக்னோ அணியின் அதிகம் தான் அதிக அளவில் இருந்தது என்று சொல்லலாம். சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழித்து தடுமாற மற்று ஒரு பக்கம் ஜடேஜா நிதானமாக விளையாடி அவரது அசரி சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் களமிறங்கிய தல டோனி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரன்களை மடமடவென ரன்களை சேர்த்தார்.
அதன் படி சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்து இருந்தது. போட்டியின் ஆரம்பத்தில் அதிரடி மன்னன் ரச்சின் ரவீந்திர ரன்களை ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறி அணிக்கு எமற்றதை அளித்தார். அதன் பின் அணியின் கேப்டன் ருதுராஜூம் 17 ரன்னிலே ஆட்டமிழந்து வெளியேறினார். மறு முனையில் விளையாடிய ரஹானே 36 ரன்களை அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்து இருந்தார்.துபே மூன்று ரன்னிலும் ரிஸ்வி ஒரு ரன்னிலும் வெளியேற மொயின் அலி அதிரடியாக விளையாடி 30 ரன்களை குவித்தனர்.

அதன் பின் தல தோனி களமிறங்கி ஜடேஜாவுடன் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்து வந்தனர். அதில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 57 ரன்களை அவர் அடித்து இருந்தார். அதன் பின் பேட்டிங் செய்த லக்னோ அணி சென்னை அணியின் பந்துவீச்சை எளிதாக அடித்து ஓவர்களில் விக்கெட்டுகள் 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் கே.எல் ராகுல் 82 ரன்களும் டி காக் 54 ரன்களையும் அடித்து இருந்தனர். இன்றைய போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சு சற்று சுமாராகவே இருந்தது என்றும் சொல்லலாம். எனவே லக்னோ அணி எளிதாக வெற்றி பெற்றது.
போட்டி குறித்து கேப்தான் ராகுல் கூறுகையில், நாள் முடிவில் நன்றாக உணர்கிறேன். நீங்கள் வெற்றி பெறும்போது, பெரும்பாலான முடிவுகள் சரியாக இருக்கும். நாங்கள் எங்கள் திட்டங்களில் உறுதியாக இருந்தோம். அதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. விக்கெட்டைப் பொறுத்து, நான் எனது பந்துவீச்சாளர்களை நிலைநிறுத்துகிறேன். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அணி திட்டங்களில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. பாதியில் 160 ரன்கள் எடுத்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். விக்கெட் மெதுவாகவும் கொஞ்சம் பிடிப்பாகவும் இருந்தது.
MSD உள்ளே நுழைந்தது மற்றும் அழுத்தம் பந்து வீச்சாளர்களுக்கு கிடைத்தது. எதிரணி பந்துவீச்சாளர்களை மிரட்டியவர். எங்கள் இளம் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகினர், கூட்டமும் வெறித்தனமாக இருந்தது. 15-20 ரன்கள் கூடுதலாக கிடைத்தது. நான் நிலைமையை மதிப்பிட முயற்சிக்கிறேன். அது இன்று வந்தது. சிஎஸ்கே ஸ்பின்னர்கள் அழுத்தம் கொடுப்பார்கள் என்று எனக்குத் தெரியும். நான் எனது பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்தேன், அது வெளியேறியது. குயின்டனும் சிறப்பாக பேட்டிங் செய்தார். இருவருக்கும் வாழ்க்கையை எளிதாக்கியது. மினி சென்னை மக்கள் முன்னிலையில் விளையாடிக் கொண்டிருந்தார். நாங்கள் ஒரு இளம் அணி, அத்தகைய கூட்டத்திற்கு முன்னால் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் அவர் கூறினார்





