IPL 2024 சேப்பாக்கத்தில் மார்ச்22ம் தேதி தொடங்குகிறது. அதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் 2024 காண அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை அழைத்து பயிற்சி ஈடுபட்டு வருகிறது. அதில் பலமான அணி என்றால் சென்னை அணியும் மும்பை அணியும் என்றும் சொல்லலாம். மும்பை அணியும் ஐந்து முறையும் சென்னை அணி ஐந்து முறையும் கோப்பையை வென்றுள்ளது.
மும்பை அணியின் கேப்டன் ஆக சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவை அணி நிர்வாகம் மாற்றி இருந்தது. இதற்கு முன்பு அவர் குஜராத் அணியில் 2 வருடங்களில் விளையாடி இருந்தார். இரண்டு வருடங்களில் ஒரு முறை கோப்பையையும் மற்றொரு முறை ரன்னரப்ஆகவும் இருந்தார். அவரை திடீரென மும்பை அணியில் அழைத்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு கேப்டன் பதிவு வழங்கியது மும்பை அணியின் ரசிகர்களிடையே மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த வருடம் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட மாட்டார் அதற்கு பதிலாக மும்பை அணி நிர்வாகம் குஜராத் அணியிலிருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது. மும்பை அணியில் ரோஹித் ஷர்மா ஒரு வீரராக மட்டுமே கலந்து கொள்வார். இதற்கு முன்பு ரோஹித் சர்மா 2013ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 2017, 2017, 2019 மற்றும் 2020 ஆண்டுகள் ஐந்து முறை மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து உள்ளார்.

இதற்கு அணியில் பல குழப்பங்களும் எதிர்ப்புகளும் அவருக்கு எதிராக எழுந்தது. ஹர்திக் பாண்டியா பதவி ஏற்ற பின் அவருக்கு அணியில் உள்ள முக்கிய வீரர்களான சூரியகுமார் பும்ரா அவருக்கு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. அவர்கள் இன்ஸ்டாகிராமில் ரோஹித் ஷர்மாவுக்கு சர்மாவுக்கு மறைமுகமாக ஆதரவாக போஸ்ட்களை போட்டு இருந்தனர். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறுகையில்,

2015 ஐ.பி.எல். தொடரில் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியபோது, சரியாக செயல்படவில்லை என்பதால் அவரை அடுத்த சீசனில் எடுக்க வேண்டாம் என்ற முடிவுடன் நிர்வாகம் இருந்தது. ஆனால் ரோகித் சர்மாதான் பும்ராவின் மீது நம்பிக்கை வைத்து அணியில் வைத்துக்கொண்டார். அதற்கான பலனை அடுத்த சீசனில் நாங்கள் கண்டோம்’ என்று கூறினார்.





