எந்த ஒரு பணத்தாலும் எனது விசுவாசத்தை வாங்க முடியாது என்று சென்னை அணையின் வீரர் மதிஷ பதிரான தற்பொழுது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். ஐபிஎல் 2024 ஏலமானது டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பதாக மும்பை அணி குஜராத் அணியின் கேப்டனாக இருந்து ஹர்திக் பாண்டியாவை விண்டோ ட்ரேடிங் மூலம் வாங்கியது. அதற்கு பதிலாக மும்பையில் அணியில் அந்த தொகைக்கு ஏற்ற வீரர்களையும் வெளியிட்டது.
ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணியில் இணைந்தது குறித்து பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் தான் தற்போது மதிஷ பதிரான அவரை விமர்சிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். இதுவரை விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இருப்பினும் அவரால் சென்னை அணியில் ஜொலித்தது போல இலங்கை அணியில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.

குஜராத் அணியின் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு அணியை வழிநடத்துச் சென்ற ஹர்திக் பாண்டியா அதில் ஒரு முறை கோப்பையிலும் வென்று கொடுத்துள்ளார் மற்றொன்று முறை இரண்டாம் இடத்தையும் பிடித்தார். இருப்பினும் அவருக்கு அணி நிர்வாகமுடன் மனக்கசப்பு ஏற்பட்டதாலே அவர் குஜராத் அணியில் இருந்து விலகினார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை பட்டியலும் விடுவித்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்ட போது அப்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா இருப்பார் என்று 5.25 மணிக்கு தகவல் வெளியானது ஆனால் 7. 25 க்கு அந்த பட்டியல் முற்றிலுமாக மாறியது.
மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்கியது உறுதி செய்யப்பட்ட பின் அவர் மும்பை அணியின் ஜெர்சியுடன் புகைப்படத்தை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அது அப்போது இணையத்தில் தீயாய் பரவியது. தற்போது இது குறித்து தான் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரி ஒன்றை பதிவேற்றி இருகின்றார். அதில் என்னுடைய விசுவாசத்தை யாராலும் பணம் கொடுத்து வாங்க முடியாது என்றும் அவர் ஹர்திக் பாண்டியாவை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

பத்ரானாவின் இந்த பதிவு ரசிகர்களிடையே பல்வேறு குழப்பங்களை தற்போது ஏற்படுத்தி உள்ளது. பத்திரனாவை டிரேடிங் வரை ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது அதன் காரணமாகவே இதுபோன்ற பதிவு ஒன்று instagram-ல் பதிவேற்றி உள்ளார் என்றும் சிலர் கூறி வருகின்றனர். மதிஷா பத்திரனாவால் தோனியின் தலைமையில் மட்டுமே சரியாக செயல்பட முடிகிறது. எனவே தோனியின் தன்னை வளர்த்ததற்கு விசுவாசத்தை மறந்து மற்ற அணிக்கு செல்ல முடியாது என்பதை பற்றி பத்திரனா மறைமுகமாக இவ்வாறு கூறியுள்ளார் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவேற்றி வருகின்றனர்.




