ஐபிஎல் 2023 தொடரின் 21வது லீக் ஆட்டம் தற்போது நடந்தது வருகிறது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் பஞ்சாப் கிங்ஸ்சுடன் எக்கான ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடந்தது. இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முயற்சி செய்தது. அது சரியாக இருந்ததா என்று கேட்டல் கண்டிப்பாக சரியான முடிவு தான். கிட்டத்தட்ட அணைத்து அணிகளுமே டாஸ் வென்றால் முதலில் பந்துவீசத்தான் செல்கின்றனர்.

அந்த வகையில் முதலில் பந்துவீசிய பஞ்சாப் அணியின் வீரர்கள் சரியான பந்துகளை வீச தொடங்கினார்கள். லக்னோ அணியும் அதற்கு தகுந்தாற் போல பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கேஎல் ராகுல் பொறுமையாக இருந்து அதிகபட்சமாக 56 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது சில அற்புதமான கேட்ச்சுகளை பஞ்சாப் அணி வீரர்கள் பிடித்து லக்னோ அணியை ரன் எடுக்க விடாமல் தடுத்தனர்.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் வீரர்களின் திறமை மிகவும் உயர்ந்துள்ளது. பீல்டிங்கின் போது கூட வீரர்களின் மாறுபட்ட சிந்தனையை பிரதிபலிக்கும் சில செயல்பாடுகளை நம்மால் பார்க்க முடியும். இந்த சம்பவம் 15 ஓவரில் க்ருனால் பாண்டியா பேட்டிங் செய்யும் போது நடந்தது. அதாவது க்ருனால் பாண்டியா காகிசோ ரபாடா பந்தில் பெரிய சிக்ஸர் அடிக்க முயன்றார். ஷாட் அடித்த பிறகு பந்து எல்லைக்கு வெளியே சென்றுவிடும் என்று அவருக்கு தோன்றியது ஆனால் அது நடக்கவில்லை.

மாறாக ஷாருக்கான் டீப் மிட்-விக்கெட்டில் நின்று இந்த பந்தை எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்று காற்றில் பாய்ந்து பிடித்தார். கேட்ச்சைப் பிடிக்கும் போது அவர் தன்னுடைய சமநிலையை இலக்கவே பந்து எல்லைக்கு வெளியே விழுவதற்கு சில வினாடிகளுக்கு முன் அவர் பந்தை காற்றில் எறிந்துவிட்டு மீண்டும் வந்து அதைப் பிடித்தார். இன்றைய போட்டியில் ஷாருக்கானின் அபாரமான பீல்டிங்கை அவர் எடுத்த அந்த விக்கெட்டுகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் அந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Safe hands ft. Shahrukh Khan 👏👏@PunjabKingsIPL gain momentum as #LSG lose both Krunal Pandya & Nicholas Pooran!@KagisoRabada25 with the crucial breakthroughs 👏
— IndianPremierLeague (@IPL) April 15, 2023
Follow the match ▶️ https://t.co/OHcd6Vf5zU #TATAIPL | #LSGvPBKS pic.twitter.com/LUbO5VUc75
இந்நிலையில் இதற்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸ்ல் போட்டியிட்ட பஞ்சாப் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் சமாளித்து கடைசி ஓவர் வரையில் எடுத்து சென்றார்கள். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷாருக்கான் திறமையாக விளையாடி பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். ஷாருக்கான் 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார் என்பது குறிப்பிடதக்கது.





