ஐபிஎல்லில் முதல் தோல்வியை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி .ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் அணி அபாரமாக விளையாடி அபார வெற்றி பெற்றது. ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

ஆனால் அது அவர்களுக்கு பாதகமான முடிவை கொடுத்தது. ஷிகர் தவான் தலைமையிலான அணி 20 ஓவர்களில் 197/4 என்ற வலுவான ஸ்கோரைப் பதிவு செய்தது, கேப்டன் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் 197 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. தவான் என்னதான் சிறப்பாக ஆகியிருந்தாலும் 2019 முதல் கிங்ஸுடன் இருக்கும் வலது கை தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் குஜராத் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.
அவர் ட்ரென்ட் போல்ட், கேஎம் ஆசிப் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் போன்றவர் நட்சத்திர பௌலர்களின் பந்துகளை அடித்து நொறுக்கி, வெறும் 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து பிரமாதமான விளையாடினார். மேலும் பிரப்சிம்ரன் 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 போர்கள் அடித்து 176.47 என்ற ஸ்டார்க் ரெட்டுடன் இருந்தார். அனால் 9.4 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த அவர் இறுதியில் ஜேசன் ஹோல்டரிடம் அவுட்டாகினார்.

ஜிதேஷ் ஷர்மா கூறியது :
சக அணி வீரரும் விக்கெட் கீப்பர்-பேட்டருமான ஜிதேஷ் ஷர்மா முதல் இன்னிங்ஸ் பிறகு பேசிய போது இளம் வீரருக்கு டிரெண்ட் போல்ட்டை எதிர்கொண்ட அனுபவம் இல்லாததால், ஸ்டிரைக்கை பரிமாறிக்கொள்ள இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பே தவான் பரிந்துரைத்ததாக கூறினார். ஆனால் 22 வயதான பிரபாசிம்ரன் வேக பந்தை எதிர்கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.

பிரப்சிம்ரன் பேட்டி :
மேலும் பேசிய பிரப்சிம்ரன் “நான் கிரீஸில் இருக்கும்போது என்னிடம் ஷிகர் பேசினார். நீங்கள் டிரென்ட் போல்ட்டுக்கு எதிராக விளையாடவேண்டாம் நான் ஸ்ட்ரைக்கரில் இருங்கள் என்று கூறினார். ஆனால் நான் இல்லை நான் ஸ்ட்ரைக் என்றேன். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டு என்னை விளையாட சொன்னார். அதோடு ஒவ்வொரு ஓவருக்குப் பிறகும் என்னிடம் வந்து இயல்பான விளையாட்டை விளையாடு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஷிகர் தவான் கூறினார் என்றார் பிரப்சிம்ரன்.
— Manikandan619 (@NinjaATG) April 6, 2023
பிரப்சிம்ரன் தனது இன்னிங்ஸ் முழுவதும் போல்ட்டுக்கு எதிராக 10 பந்துகளை எதிர்கொண்டு 14 ரன்கள் எடுத்து 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் விளாசினார். மேலும் வெறும் 28 பந்துகளில் தனது அரை சதத்தை அடித்தார் பிரப்சிம்ரன், ஆனால் அவர் தன்னுடைய வெறியாட்டத்தை தொடர்ந்து விளையாடியதால் 10வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.




