இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 38வது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோத உள்ளது. இப்போட்டியானது மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்த வருடம் ஐபிஎல்லில் மோதின, அப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

லக்னோ அணி இது வரை 8 போட்டிகளில் 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதே போல் தான் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் 4 போட்டிகளை வென்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.அதன் படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். கே.எல். ராகுல் 12 ரன்களில் வெளியேறினார்.
இருப்பினும் மற்றொரு பக்கம் மேயர்ஸ் அதிரடி பாணியை விடாமல் விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்ய, 54 ரன்களில் ஆட்டமிழந்தார். பதோனி மற்றும் ஸ்டானிஸ் ஜோடி சேர்ந்து பஞ்சாப் அணியின் பௌலிங்கை சிதறடித்து வந்தனர். 9 வது ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 குவித்து இருந்தனர். பதோனி 24 பந்துகளில் 43 ரன்களை குவித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற, அதன் பின் பூரான் தனது பங்கிற்கு பஞ்சாப் அணியை சிதறடித்தார்.

15.5 ஓவர்களிலே 200 ரன்களை குவித்து அதிரடி ஆட்டத்தை காட்டி வந்தனர். பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவானுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். பஞ்சாப் அணியின் பௌலர்கள் என்ன செய்யதென்று தெரியாமல் திணறி வந்தனர். ஸ்டானிஸ் 72 ரன்களை குவித்து வெளியேற, அதன் பின் பூரான் 45 ரன்களை குவித்த நிலையில் வெளியேறினார், இறுதியில் 20 ஓவர்களில் 257 ரன்களை குவித்து வந்தது லக்னோ அணி.
இந்நிலையில் இரண்டாவது களமிறங்கிய லக்னோ ஆனால் ஈடுகொடுக்க முடியாததான் காரணமாக பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டுகளை போல விழுந்த்னர். ரன்களை பஞ்சாப் அடிக்க முயன்றாலும் அவை பலனளிக்காமல் ஆட்டமிழந்தார்கள். இந்த செய்தியை எழுதும் வரையில் பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்துள்ளனர்.
Watching Punjab Kings like pic.twitter.com/WS5LIIRSWt
— Bəäŕđĕď Đřåğøñ (@VanHelSiingh) April 28, 2023
Preity Zinta be like 😅😅😅 pic.twitter.com/LTBI9YbHQb
— Ibrahimpinjarie🇮🇳 (@Ibrahimpinjarie) April 28, 2023
சொல்லப்போனால் இந்தப் போட்டியில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் மிகவும் மோசமாக பந்துவீசினார்கள். ஆரம்பம் முதலே பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களை கடுமையாக தாக்கினார்கள் லக்னோ. இதனால் கோபமடைந்த ரசிங்கர்கள் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாவை சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் அவர் பிக்சிங் செய்ததாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.





