ஐபிஎல் 16 தொடரில் இதுவரையில் பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். குஜராத் அணியில் கேன் வில்லியம்சன், டெல்லி அணியில் ரிஷப் பந்த் போன்றவர்கள் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அந்த வகையில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் காயமடைந்த வீரர் ராஜ் அங்கத் பாவா தற்போது வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக அவரை விட சிறந்த வீரர் தற்போது பஞ்சாப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2023 இன் முதல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மழை குறுக்கிட்ட ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் 7 ரன்கள் வித்தியாசத்தில் 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்றது. அதே நேரத்தில், இப்போது இரண்டாவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் புதன்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் ராஜ் பாவா வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் விளையாட ராஜ் பாவாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் அவர் 11 ரன்கள் எடுத்தார். ஆனால் இந்த முறை காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாடாமல் வெளியேறியுள்ளார். அதே நேரத்தில் ராஜ் பாவாவுக்கு பதிலாக பஞ்சாப் வீரர் குர்னூர் சிங் பிரார் வந்துள்ளார். இவர் ரூ.20 லட்சத்துக்கு பஞ்சாப் அணியால் சேர்க்கப்பட்டுள்ளார்.
Gurnoor Brar is our newest sher! 🦁
— Punjab Kings (@PunjabKingsIPL) April 5, 2023
He joins the team as a replacement for Raj Angad Bawa. #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL pic.twitter.com/ZdvVh2JrWy
யார் இந்த குர்னூர் ப்ரார் ?
குர்னூர் சிங் ஒரு ஆல்-ரவுண்டர் வீரராக ஆவார். அவர் பேட்டிங் மற்றும் வேக பந்துகளையும் வீசுவார். குர்னூர் சிங் ப்ராருக்கு 22 வயதுதான் ஆனாலும் இதுவரை 5 முதல் போட்டிகளில் விளையாடி 26 சராசரியில் 107 ரன்கள் எடுத்துள்ளார்.அதே சமயம் பந்துவீசும்போது இதுவரை மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குர்னூர் சிங் ப்ராரின் கேரியர் இதுவரை சிறப்பாக இல்லை என்றாலும், ஐபிஎல்லில் அவருக்கு வாய்ப்பு கிடைத்து.
Looks decent pacehttps://t.co/Nqtqm0RvoI
— 🍁 (@tuneyjonakaha) April 5, 2023
கேக்கப்பந்து வீச்சாளர் :
ஒரு வேளை இந்த வாய்ப்பை சரியாக குர்னூர் சிங் பயன்படுத்தி கொண்டார் என்றால் கண்டிப்பாக ஒரு நல்ல ஆல்ரவுண்டராக் வர அதிக காலம் ஆகாது. மேலும் குர்னூர் சிங் பிராரின் பந்துவீச்சைப் பற்றி பேசுகையில், அவர் வலது கையால் வேகமாக பந்து வீசுகிறார், எனவே அவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை விட பந்துவீச்சாளராக குர்னூர் சிங் இருப்பர் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.





