தமிழ் நாட்டை சேர்ந்த அஸ்வின் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். பல போட்டிகளில் இந்தியாவிற்காக ஆடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்திருக்கிறார். அதிலும் இவரது சூழல் பந்து விக்கெட்டுகள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக பேசப்படும். இந்நிலையில் பல காலமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அஸ்வின் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முன்னணி பந்துவீச்சாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று சென்னையில் நடந்த கோடை கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாமில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார். அப்படி அவர் சந்திக்கும் போது சில முக்கியமான விஷியங்களை பற்றியும் சூதாட்டம் பற்றியும் பேசியுள்ளார். அவர் கூறுகையில் “வெளிநாட்டில் கிரிக்கெட் விளையாடுவதற்கு வசதி இருப்பதை போல இந்தியாவில் கிராமப்புறங்களில் கிடைக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதர்க்கு போதிய இடம் வசதி இல்லை. இது குறித்து விளையாட்டு துறை அமைச்சரிடம் முறையிடுவோம் என்று பேசினார். அப்படி பேசிக்கொண்டிருக்கும் போதுதான் ஆன்லைன் சூதாட்டம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அஸ்வின் ஆவேசமாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்தார். அவர் பேசுகையில் செய்தியாளரிடம் “உங்களுக்கு உன்மை வேண்டுமா? ஹெட்லைன் வேண்டுமா? நான் ஆன்லைன் ரம்மி விளையாடவில்லை.

அதனால் நான் செய்யாத ஒரு காரியத்தை பற்றி நான் எப்படி பேசமுடியும் என்றார். மேலும் பேசிய அஸ்வின் சூதாட்டம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். அதோடு செல் போன்களை எடுத்து வைத்தால் குழந்தைகள் மைதானத்திற்கு வந்து விடுவார்கள். அதற்காக செல்போனை எடுத்து வைக்க முடியுமா. மூலக் காரணம் என்னவே அதனை மட்டுமே பாருங்கள்.
செல் போன்கள் வந்ததில் இருந்து எந்த குழந்தைகள் மைத்தனத்தின் பக்கமே வரவில்லை. ஒரு காலத்தில் லாட்டரி விளையாடுவது இந்திய சட்டத்திற்கு புறம்பானதாக இருந்தது. ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்டு இருந்தால் விளையாடாதீர்கள். அது சூதாட்டம் கிடையாது “கேம் ஆஃப் ஸ்கில்ஸ்”. அதனால் அதனை சூதாட்டம் இல்லை என்று கூறினார் தமிழ்நாட்டின் சூழல் பந்து வீச்சாளர் அஸ்வின்.





