ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய முதல் போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியில் இருந்தும் விளையாடுவதில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டு, எனவே அப்பக்கானிதாஸ் வீரர் ரஷித் கான் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் முதலி டாஸ் வெற்ற ரஷித் கண் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ய முடிவு செய்தார்.

அவர் எடுத்த முடிவு முற்றிலும் சரியானது என்பதை நிரூபித்தது. அதோடு இவர் தற்போது நோம்பு கடிபிடிப்பதினால் தண்ணீர் குடிக்க கூடாது எனவே வெயில் நேரத்தில் ஆடுவது அவருக்கு சரியாக இருக்காது. எனவே தான் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த தொடக்கம் சரியாக இருந்தாலும் 4வது ஓவரில் சுனில் நரேனிடம் கேட்ச் கொடுத்த அவுட் ஆகினார் ஷாகா.
அதற்கு பிறகு வந்த சும்பன் சுப்மான் கில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க களமிறங்கிய இரண்டு தமிழ் நாடு வீரர்களும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்க்ள. விஜய் சங்கர் அதிகபட்சமாக 24 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரோடு சாய் சுத்தரசனும் அரை சதம் விளாசினார் அதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204ரன்கள் எடுத்தார்கள்.

அதற்கு பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நல்ல தொடங்கமாக அமையவில்லை. இருந்தாலும் வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஸ் ராணா நல்ல துவக்கத்தை கொடுதார்கள். இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸின் 17வது ஓவரில் ரஷித் கான் தனது ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் ஆண்ட்ரே ரசல் கேட்ச் அவுட் ஆனார். இதன்பிறகு, சுனில் நரைன் ஜெயந்த் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், பின்னர் மூன்றாவது பந்தில் ஷர்துல் தாக்கூர் லெக் பிஃபோர் விக்கெட்டுக்கு வெளியேறினார்.
𝐇𝐀𝐓-𝐓𝐑𝐈𝐂𝐊 𝐟𝐨𝐫 𝐑𝐚𝐬𝐡𝐢𝐝 𝐊𝐡𝐚𝐧! 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 9, 2023
Andre Russell ✅
Sunil Narine ✅
Shardul Thakur ✅
We have our first hat-trick of the #TATAIPL 2023 & it's that man – @rashidkhan_19! 🙌 🙌
Follow the match ▶️ https://t.co/G8bESXjTyh#TATAIPL | #GTvKKR | @gujarat_titans pic.twitter.com/fJTg0yuVwu
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய நான்காவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ரஷித் கான் பெற்றுள்ளார். இதனுடன் டி20 கிரிக்கெட்டில் 4 ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு ரஷித் கான் கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இவர் மூன்று விக்கெட்டுகளை எடுத்த போதிலும் கடைசியாக வந்த ரிங்கு சிங் சாதனை படைத்தது வெற்றியை கொல்கத்தா அணிக்கு தேடி கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.




